பிஜப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 7 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரினை தொடர்ந்து இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரின் பிஜப்பூர் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமான இங்கு விவசாயம் சரிவர நடக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த லலிதாதாட்டி,7 என்ற சிறுமி கடந்த அக்டோபர் மாதம் முதல் காணாமல் போனார். பின்னர் அம்மாநில டி.வி.யில் இவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டது தெரிந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த இரு விவசாயிகளை பிடித்து விசாரித்தில் அவர்கள் , விவசாயம் செழி்க்க வேண்டியும், நல்ல அறுவடை கிடைக்கவும், சிறுமி லலிதாடாட்டியை கடத்தி சென்று அவளை கொன்று கல்லீரலை வெளியே எடுத்து நரபலி கொடுத்தோம் கூறினர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ராஜேந்திரநாராயண் தாஸ் கூறுகையில், இக்கிராமத்தில் படிப்பறிவு இல்லாத மக்கள், மிகவும் வறுமையில் வாடுகின்றனர். மேலும் மூட நம்பிக்கையின் பேரில் தான் இந்த நரபலி நடந்துள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக