நெல்லை மாவட்டதில் மாணவர்களே இல்லாமல் திண்டாடும் பள்ளிகளில் ஆள் பலத்தைக் காட்டுதவற்காக காப்பகங்களிலிருந்து மாணவர்களை அந்தப் பள்ளிகளுக்கு வாடகைக்கு விடுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை அருகே இட்டெரியில் சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவத்தின் பின்னனி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த மாவட்டத்தில் செயல்படும் பல தொண்டுநிறுவனங்களின் காப்பகங்களில் தங்கியுள்ள மாணவர்களை, மாணவர்கள் பலம் இல்லாத பள்ளிகளுக்கு வாடகைக்கு விடுகிறார்களாம்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது 120 குழந்தை காப்பகங்கள் அனுமதி பெற்று செயல்படுகின்றன. இவற்றில் இருந்து சமீபகாலமாக ஆட்களே இல்லாத பள்ளிக்கு குழந்தைகளை வாடகைக்கு விடப்படுகின்றனர் என்ற தகவல் சமூக நலத்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதையடுத்து சிறுவர்களை கிராமப்புற பள்ளிகளுக்கு வலுகட்டாயமாக அனுப்பி வைக்கும் காப்பகங்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இட்டெரி பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் படித்த ஓன்றாம் வகுப்பு மாணவர்களான மகேஷ், அர்ஜூன் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி செவ்வாய்கிழமையன்று பலியானார்கள். பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் எதுவும் அறியாமல் தங்கள் வாழ்க்கையை நீராதாரங்களில் முடித்து கொள்ளும் சோக சம்பவங்கள் ஓரு புறம் என்றால் மறுபுறம் காப்பகங்களின் செயல்பாடுகளும் கேள்விகுறியாகி உள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசின் அதிரடி நடவடிக்கை பின்னர் காப்பகங்கள் தொடர் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றன. குமரி மாவட்டம் குழித்தலையில் வசதியே இல்லாமல் அஸ்ஸாம், மணிப்பூர் குழந்தைகளை வைத்து காப்பகம் மீது சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியதன் பேரில் அங்குள்ள மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக இம்மூன்று மாவட்டங்களிலும் சமூக நலத்துறை அதிரடி சோதனை நடத்தியது. புற்றீசல் போல் பெருகியிருந்த பல காப்பகங்கள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக