அதிரடியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடம் மாற்றுவது, அமைச்சர்களை அடிக்கடி துறை மாற்றுவது, நீக்குவது என்று எப்போதும் மாற்றம் குறித்த செய்திகளே பத்திரிகைகளில் பிரதான இடம் பிடிக் கின்றன. ஒரு அமைச்சர் தன் துறையில் குறைந்தபட்சம் ஒரு முழு ஆண்டாவது செயல்பட்டால்தான் அந்தத் துறையின் நடைமுறைகளை முழுக்கப் புரிந்துகொள்ள முடியும். அப்போதுதான் துறை அதிகாரி களிடம் நல்லுறவைப் பேணவும் முடியும். ஆனால், அதற்குக் கொஞ்சமும் வாய்ப்பு அளிக்காமல் அடிக்கடி அதிகாரிகளையும் அமைச்சர்களையும் மாற்றுவது நிர்வாகச் சிக்கல்களைத்தான் அதிகமாக்கும். ஒவ்வொரு மாற்றத்தின்போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சர்களும் தவறு செய்திருப்பார்களோ என்று உருவா கும் பிம்பம் காரணமாக, அவர்கள் மாற்ற லாகிச் செல்லும் துறையினர் அவர்களைச் சுதந்திரமாக அணுக யோசிப்பார்கள். அதிகாரிகள்தான் அமைச்சர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால், அதற்கு இங்கே வழி இல்லாத வகையில் அதிகாரிகளும் பந்தாடப்படுகிறார்கள். மழைக் காலங்களில் சாலையில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மக்களுக்கு வெள்ள நிவாரணம் கிடைக்க வேண்டும். நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங் கள் மூலமாகவே இந்த நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், தலைமை அதிகாரியை அணுகிக் கேட்டால், 'இன்னும் நிதி வரவில்லை’ என்கிறார்கள். அதற்குக் காரணம் நிர்வாகக் குளறுபடி கள்தான். காவல் துறை அதிகாரிகளும் அரசின் பந்தாடலுக்குத் தப்பவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்களே யாரிடம் எதற்கு மனு கொடுத்தோம், நாம் மனு கொடுத்த நபர் இன்னும் பதவியில் இருக்கிறாரா என்று குழம்பிப் போகிறோம். அவர் போய்விட்டால், அவர் இடத்தில் வந்த புதியவருக்கு, இன்னொரு புது மனுவைத் தயார் செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், தீர்வு?
மாவட்ட அளவில் வருவாய்த் துறையில் பல காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அதுபோல கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வு நடத்தி ஆட்களைத் தேர்வு செய்து, அதுவும் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பணியிடங்களுக்கு ஆட்களை நியமித்தாலே அரசுக்குப் பெரும் சுமை குறையும். மக்கள் நலத் திட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேரும்.
அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றும் திட்டம் ஜெயலலிதாவின் நிர்வாகக் கோளாறுக்கு வலுவானதொரு அத்தாட்சி! நூலகத்துக்கு என்று உருவாக்கிய இடத்தை குழந்தைகளுக்கான மருத்துவமனையாக மாற்றுவது அபத்தமானது.
அதே போல புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பொதுமருத்துவமனையாக மாற்றுவதாக அறிவித்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குத் திரும்பினார் ஜெயலலிதா. சரி... இந்த அறிவிப்பில் கண்டவாறு மருத்துவமனையாகவாவது ஆக்கினார்களா என்றால், அதுவும் இல்லை. ஒரு சுற்றுலா தலம் போல அனைவரும் வந்து வேடிக்கை பார்க்கும் இடமாக ஆகிவிட்டது புதிய தலைமைச் செயலகக் கட்டடம்.
மக்கள் நலப்பணியாளர்களை மொத்தமாக நீக்கினார்கள். அப்படியானால் அவர்கள் இதுவரை பார்த்த வேலைகளை இனி யார் பார்ப்பார்கள்? ஏன் நீக்கினோம் என்பதற்கும் பொருத்தமான காரணம் இல்லை. சொல்லவும் அவர்களால் முடியாது. அரசியல் உள்நோக்கம்தான் அத்தனைக் குளறுபடிகளுக்கும் காரணம்!
இப்படிக் குழப்பங்களின் உச்சத்திலேயேதான் இந்த ஆண்டு கழிந்தது. அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் சிரமப்படுவது என்னவோ மக்கள்தான்!''
thanks vikatan+afzal burma bazar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக