செவ்வாய், 23 நவம்பர், 2010
இனியபாரதிக்கு சிறைத்தண்டனை ,சந்திரநேரு சந்திரகாந்தனை இழிவான வார்த்தைகளை பிரயோகித்து
தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை இழிவான வார்த்தைகளை பிரயோகித்து கொலை செய்வதாக அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி என்றழைக்கப்படும் கந்தசாமி நிசாந்தனுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்படட இரண்டு வருட சிறைத் தண்டனையை கல்முனை மேல்நீதிமன்றம் விதித்துத் தீர்ப்பளித்தது. 2007ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி திருக்கோவில் பகுதியில் வைத்து தன்னை இனியபாரதி மிரட்டியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் கூறியிருந்தார். திங்கட்கிழமை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இனியபாரதி தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டார். எனினும் பொதுமக்களுக்கான சேவையில் இனியபாரதி ஈடுபட்டுக் கொண்டிருப்பதனால் அவரை குற்றவாளியாக கருதினாலும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையையும், இருபத்தையாயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் தீர்ப்பளித்தார். இருபத்தையாயிரம் தண்டப்பணத்தை கட்டத் தவறினால் மேலும் ஆறு மாத கால கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். அத்துடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை காலத்தில் வேறு ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டால் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையையும் சேர்த்து அனுபவிக்க வேண்டி ஏற்படும் எனவும் குறிப்பிட்டு நீதிபதி தீர்ப்பளித்தார். - பி.பி.சி செய்தி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக