இலங்கைபற்றிய விடயங்களில் மாற்றமடைந்தவரும் இந்திய அரசின் நிலைப்பாடு”
Evolution of Indian Policy on Sri Lanka
ஓய்வு பெற்ற இந்தியப் புலனாய்வுத்துறை அதிகாரி கலாநிதி; எஸ்.சந்திரசேகருடன் லண்டனில் ஒரு சந்திப்பு
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.
லண்டன் தேசம் பத்திரிகைக்குழுவினரும், தமிழருக்கான விஞ்ஞான கலை அக்கடமிக்குழுவும (ASIATIC) சேர்ந்து, ஒய்வு பெற்ற இந்திய புலனாய்வுத்துறை அதிகாரியான கலாநிதி எஸ் சந்திரசேகருடனான ஒரு கலந்துரையாடலை 10.11.10ல் லண்டனில் நடத்தினார்கள். தமிழ், சிங்கள முஸ்லிம் மக்கள் பெருந்திரளில் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களின் ஆயதப்போரில் திரு சந்திரசேகரின் பங்கீடு மிக முக்கியமானதாகவும், சென்னைத் தமிழரான புலனாய்வு அதிகாரியான அவர்தான் தமிழ் இளைஞர்களுக்கு ஆயதப்பயிற்சி கொடுப்பதில் முக்கிய பங்கெடுத்தவர் என்றும் அக்கூட்டத்தில் தெரியவந்தது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் சந்திரசேகரால் ஆயதப்பயிற்சிக்கு அனுப்பப்பட்ட போராளிகளும் இருந்தார்கள்
படத்தில் இருப்பவர்கள் ஆசியாட்டிக் அமைப்பாளர் ரவி சுந்தரலிஙகம் கலாநிதி சந்திரசேகாவந்திருந்த தமிழர்களிடமிருந்து, ஆயதப்போரில் இன்று தமிழர்கள் தோல்விகண்டதிற்கும் இந்தியாதான் காரணமென்ற குரல்களும், தமிழ்களுக்குத் தமிழ்ப்பிரதேசம் கிடைக்க வேண்டிய விடயத்தில் இந்தியா கைவிட்டுவிட்டது, இந்தியா தமிழர்களுக்குத் துரோகம் செய்துவிட்டது, இலங்கைக்கு ஐக்கியநாடுகளின் படை வருவதை இந்தியா எதிர்த்தது, தமிழரின் இறுதிப்போராட்டத்தின்போது இந்தியா இலங்கைக்கு உதவி செய்து இலங்கையை வெற்றி கொள்ளப் செய்தது, 13வது சீர்திருத்தச்சட்டத்தை இலங்கை அமுல்படுத்தவேண்டும் என்பதை இலங்கைக்குச் சுட்டிக்காட்டாமல் இருப்பது, இன்றும் இலங்கை அரசைப்போர்க்குற்றங்கள் காரணமாகக் கூண்டில் நிறுத்த மேற்கு நாடுகள் முனையும்போது இந்தியா தடைபோடுகிறது, இந்தியாவுக்கு எதிரான சீனாவுடன் பாரிய உறவுகளை இலங்கை மேற்கொள்ளுவதால் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் வருவதைத் தடுக்காமல் இருப்பது, சீனாவின் உதவியிடன் தமிழ்ப் பிரதேசங்களில் அணு ஆயுத உற்பத்தி நிலயங்கள் போடுவதைக்கண்டும் காணாமல் இருப்பது, தமிழ்ப்பிரதேசங்களில் அதிகப்படியாகக் குவிக்கப்படும் இலங்கை இராணுவத்தைப்பற்றி இந்தியா அக்கறை காட்டாதது, என்பது போன்ற விடயங்களுடன,தமிழ்நாடட்டு அரசியல்வாதிகளும் இலங்கைப்பிரச்சினையும், இந்தியாவில் வாடும் இலங்கை அகதிகள், இந்தியாவில் அல்லற்படும் இந்திய வம்சாவழித்தமிழர்கள்.இலங்கையில் நடைபெற்றக்கொண்டிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னெடுப்புக்கள்,போன்ற பல விடயங்களையும் லண்டன்வாழ் தமிழர்கள் முன்வைத்தார்கள்.
கலாநிதி சந்திரசேகர் அவர்கள் தன் முன்னுரையில் குறிப்பிடும்போது, அவர் 80-91 வரை இந்திய அரசின் உத்தியோகத்தராகவிருந்ததாகவும் இன்று ஓய்வு பெற்றுவிடடு தெற்காசிய ஆய்வுக்குழுவின் இயக்குனராப்பணிபுரிவதாகவும்; சொன்னார்.
அவர் மேலும குறிப்பிடும்போது,இந்தியா ஒருநாளும் இலங்கை பிரிபடுவதை ஆதரிக்கவில்லை. இலங்கைத் தமிழர்களுக்குரிய அரசியல் பொருளாதார உரிமைகள் சமத்துவமாகக் கொடுக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாயிருந்தது, இன்றும் அதேநிலையைத்தான் கடைப்பிடிக்கிறது. 1983கு;குப் பின் இந்தியா இலங்கையில் நேரடியாகத்தலையிட்டது ஒரு துரதிர்ஷடமான விடயமாகும்.1983ல் சில சிங்கள் அரசியல்வாதிகள் தேசியப்பெயர் அட்டவணைகளுடன் தமிழர்களைத் தேடியலைந்து கொடுமைகள் செய்தார்கள். அக்கலவரத்தின்பின் இந்தியா வந்த இலங்கையில்; தாங்கள் பட்ட கொடிய அனுபவங்களைச் சொன்னார்கள். இந்தியாவுக்கு இலங்கையில் தமிழருக்கு நடந்த கொடுமை அதிர்ச்சியைக்கொடுத்தது.
அக்கால கட்டத்தில், இலங்கை அரசுக்கு, அமெரிக்கா, பிரித்தானியா,இஸ்ரேல் போன்ற நாடுகள் தமிழர்களை அழிக்க உதவி செய்தன. தமிழர்களின் பாதுகாப்பை அவர்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற முயற்சியாக இலங்கைத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது.
பல தரப்பட்ட இயக்கத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞர்களும் ஒரு பிரமாண்டமான சக்தியாக உருவெடுத்தார்கள் இந்த வளர்ச்சியை அரசியற்செயற்பாடாக அவர்கள் மாற்றவில்லை. சென்னைப் பாண்டிச்சேரியில் நடந்த சம்பவம்(பிரபாகரனும் உமா மகேஸவரனும் துப்பாக்கிப்போர் நடத்தியது?) எங்களைச் சிந்திக்கப்பண்ணியது.
1987ல் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தமிழருக்கெதிரான இலங்கையின் கெடுபிடிகள் உச்சமடைந்தபோது இந்தியா இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பியது. இது மிகவும் ஒரு துரதிர்ஷ்டமான விடயம். அக்கால கட்டத்தில் இந்திய அரசு இலங்கை பற்றிய சில தெளிவான திட்டங்ளை வைத்திருக்கவில்லை என்பது எனது கருத்து. இந்தியாவில் பல பிராந்திய மக்களும் தங்கள் விடயங்களைத் தாங்களே நிர்வாகம் செய்வதுபோல் இலங்கையிலும்,
ஐக்கிய இலங்கைக்குள் தமிழருக்கு அதிகாரம் வழங்கக்கூடியவித்தில் 13 சீர்திருத்தசசட்டம எழுதப்பட்டது. அந்தச் சட்டம் இன்று நடைமுறைப்படுத்தவில்லை. ஓரு நாட்டில் நடக்கும் பிரச்சினைக்கு அதில் சம்பந்தப் பட்டவர்கள்தான் சாசனங்கள் எழுதவேண்டும் கையெழுத்திடவேண்டும் ஆனால் 13வது சரத்து இந்திய, இலங்கை அரசால் கையெழுத்திடப்பட்டது. இலங்கைத் தமிழருக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் சாத்திடப்படவில்லை.
இந்திய அமைதிப்படை, குமரப்பாபோன்ற ஒன்பதுபேரையும் இலங்கை அரசிடம் ஒப்படைத்தது மிகவும் பிழையான விடயம். அதைத்தொடர்ந்து நடந்த விடயங்களால் இந்திய அமைதிப்படை வெளியேறியபின் இலங்கை தொடர்பாக இந்தியா எந்தச் செயலையும்முன்னெடுக்கவில்லை.
இலங்கையின் உள்நாட்டு விடயத்தில் தலையிடுவதில்லை என்பது மட்டுமல்ல அண்டை நாடுகளின் உள்நாட்டுப்பிரச்சினைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவதில்லை என்பது இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கைகளில் ஒன்று.
சுதந்திரமடைந்து நீpண்டகாலமாக இந்திய சமுத்திரத்தின் முக்கியம் பற்றி இந்தியா அக்கறைப்படவில்லை. இப்போது சீனா பெரிய அளவில் இலங்கையில் தலைபோடுகிறது. சீனா பொருளாதாரத்தில் அபாரவெற்றியைப்பெற்றிருக்கிறது. இந்தியாவும் பின் நிற்கவில்லை. இந்தியாவின் வளர்ச்சி 8-9 விழுக்காட்டில் இருக்கிறது. அண்டை நாடுகள் விருத்தியடையாவிட்டால் அதனால் உள்நாட்டுப்பிரச்சினைகள் வரும். அண்டை நாட்டுப் பிரச்சினைகள் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் தரக்கூடாது. அதனால் இந்தியா இலங்கையின் விருத்திக்கு உதவுகிறது.இலங்கையில் சிங்கள் தமிழ் மக்களின் பொருளாதார முன்னேற்றம் அவர்களின் நல்வாழ்வுக்கு முக்கியமானது.
அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகம் கட்டுவதால் இலங்கையைச் சீனா ஆட்டிப்படைப்தாக நான்நினைக்கவில்லை..
இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னெடுப்புக்களை நான் நம்பவில்லை.இலங்கையில் முக்கியமாகத்தேவையானது அபிவிருத்தி. இந்தியா அதற்கான உதவிகளைச்செய்கிறது. தமிழர்களுக்கான அரசியல் பொருளாதார விருத்திக்கு 13வது சரத்து அமுல் படுத்தப்படுவது முக்கியம். இந்தியா இதுபற்றி எத்தனையோதரம் இலங்கையிடம் சொல்லி விட்டது.அதைவிட வேறு ஒன்றும் இந்தியா செய்ய முடியாது.ஆனால் 13வத சரத்து அமுலாகும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
தமிழ் நாடு இருந்திருந்து சில அறிக்கைகள், வேண்டுகோள்களை விடுவதைவிட அவர்களால் வேறோன்றும் செய்ய முடியாது. இந்தியத் தேர்தல் அண்டுவதால் மத்திய அரசும் அதே வேலையைத்தான் செய்யும். தமிழ் நாட்டுக்கு இலங்கைப்பிரச்சினை ஒரு சிம்போலிக்கான விடயம் மட்டுமே. இந்தியாவில் பொருளாதார விருத்திபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு நான்காம் இடம் பெற்றிருக்கிறது.அவர்கள் திறமாக முன்னேறுகிறார்கள் ஆங்கில, கணனி அறிவு தென்னகத்தில் கொடிபறக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியால் வடக்கு தெற்கு பேதங்கள் மறக்கப் படுகின்றன. இலங்கையிலும் இம்மாற்றங்கள் வரவேண்டும். யுத்தம் என்பத மிகவும் கொடுமையானது; நடந்ததை வைத்துப்பேசிக்கொண்டிருக்காமல் மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடு படவேண்டும் என்றார்.
இந்தியாவுக்கு ஓபாமா வந்துபோனார் அதன்பின்னர் இந்திய வெளிவிவகார மந்திரி இலங்கை வருகிறார் அதெல்லாம் எதற்காக என்று கேட்டபோது, ஓபாமா சீனாவுக்கு எதிராக ஒரு அணி திரட்டப்பார்க்கிறார். இரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு பனிப்போர் நடந்தது. அந்த கால கட்டத்தில் இந்தியா அணிசேராத நாடுகளுடன் இணைந்தது. இப்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு பனிப்போர் நடக்கிறத. தென்னசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்காக இந்திய சீனாவுடனான அரசியல் உறவுகளைத் தொடரும். ஆனால் முரண்பாட்டை வளர்த்தால் அது தென்னாசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தையுண்டாக்கும்.பனிப்போர் எங்கள் பிராந்தியத்துக்கு உகந்ததல்ல.
வெளிநாடுகளில் ஒலிக்கும் தமிழ்த்தேசியக்குரலைப்பாவித்து அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கையில் தலையிடுமா என்ற கேள்விக்கு சந்திரசேகர் பதிலளிக்கும்போது, உலகம் மிகவும் வேகமாக மாறிக்கொண்டு வருகிறது. பொருளாதாரம் முன்னிலையில் இருக்கிறது. அதற்காக ஒருத்தருடன் ஒருத்தர் இணைகிறார்கள் என்றார்.
இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சியற்ற கூட்டாட்சி நிலமை நீடிக்குமா அதனால் வெளிநாட்டுக்கொள்கைகளில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு, இந்தியவின் அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தியாவின் பொருளாதாரக்கொள்கை முக்கியம்.வெளிநாட்டுக்கொள்கைகள் அண்டை நாடுகளின் நிலையைப்பொறுத்தது.
இன்று, பர்மாவில் 2003ம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத ;தேர்தலில் வெற்றிபெற்ற திருமதி ஆங் சூ கி சிறையில்வாடுகிறார் இவர் இந்தப் பிராந்தியத்தில் பதவிக்கு வந்த சந்திரிகா,கசினா போன்ற அரசிற் தலைவிகளை விட மிகவும் ஆளுமையானவர் புத்திசாலி ஆனால் இந்தியா அவர்களின் உள்நாட்டு விடயத்தில் தலையிடமுடியாது. மேற்கு நாடுகள் சத்தம் போடலாம் ஆனால் நாங்கள் அண்டை நாடுகள் அரசியல் உறவுகளை வைத்திருக்கவேண்டும் என்றார்.
இலங்கைத் தமிழ் இளைஞர்களை ஆயதப்பயிற்சிக்கு உட்படுத்திய இந்தியாவுக்கு இலங்கைத் தமிழரின் இன்றைய நிலைக்குப் பொறுப்பில்லையா என்ற கேள்விக்கப் பதிலளிக்கையில், இந்தியா ஆயதப் பயிற்சி மட்டும்தான்கொடுத்தது. இந்தியா இலங்கைத்தமிழரின் அரசியற் பிரச்சினை எப்படி முன்னெடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை.அது தமிழரைப்பொறுத்தது. அவர்கள் ஆயதத்தைப் பாவித்துத் தங்களைத்தாங்களே அழித்துக்கொண்டார்கள். மாத்தையாவை இந்தியாவின் கையாள் என்று கொலை செய்தார்கள். நான் புலனாய்வுத் துறையில் இருந்தவன் மாத்தையாவைச் சந்தித்தது கிடையாது. இதுவரை நடந்த விடயங்களுக்கு ஆயதம் தாங்கியவர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழுவில் சித்தார்தன் சொன்னதுபோல் இலங்கை அரசு தங்களுடன் இணைபவர்களுக்க மட்டும் உதவி செய்யக்கூடாது. ஓட்டுமொத்தமான தமிழர்களின் வளர்ச்சிககும் நீங்கள் ஒன்றிணைந்துகுரல் கொடுக்கவேண்டும்; என்றார்
தென்னிலங்கையில் ஜேவிபியை அழித்தபின் இலங்கை அரசு அங்குபெரிய படையை நிறுவவிலலை. ஆனால் முள்ளியாவளைச் சண்டையில் புலிகள் தோற்றபின்னும் தமிழ்ப் பகுதிகளில் 400.000 இலங்கை இராணுவப் படைகள் இருக்கின்றன , இதுபற்றி உங்கள் கருத்து என்னவென்று கேட்டபோது, இலங்கையில் புலிகள் அழிந்தாலும் புலம்பெயர் நாடுகளில் அவர்களின் ஆதரவாளரர்கள் பலம் வாய்ந்திருக்கிறார்கள் அவர்கள் இன்னுமொரு போராட்டத்தை ஆரம்பிக்கலாம் என்ற பயம் இலங்கைக்கு இருக்கிறது. அதனால் தமிழ்ப் பகுதிகளில் படையிருக்கிறது; இந்தியாவில் காஷ்மிரில் இந்தியப் படையிருக்கிறது. ஓரு நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு விடயத்தில் இந்தியா தலைபோடமுடியாது. புலம் பெயர்ந்த தமிழர்கள் பலம் வாய்ந்தவர்கள் இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வு வளம் பற்றிய அவர்களின் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும்.
சீனாவும் இந்தியாவும் பிரச்சினைப்படுவதால் தமிழர்கள் நன்மையடையப்போவதில்லை. இந்தியாவிலும் பயங்கரவாதம் உண்டு. சீனாவுக்கம் இந்தியாவுக்கும் பொருளாதாரப்பாதுகாப்பு முக்கியமானது.
புலிகளுடன் நடந்த யுத்தத்தில் இலங்கையின் வெற்றிக்கு இந்தியா உதவிசெய்தது.40.000 தமிழ் மக்கள் இறந்தார்கள். இந்தியா அண்மையில் மகிந்தாவை விசேட அதிதியாக அழைத்தார்கள். இந்தியாவிலிருந்து திரும்பி வந்த கையோடு மகிந்தா சீனா பயணமாகிவிட்டாh. இதன் பரிமாணம் என்ன என்று கேட்டதற்குப் பதில் சொன்ன கலாநிதி, மகிந்தா ராஜபக்சா பிசாசு விளையாட்டு விட்டால் இந்தியா பொறுமையுடன் இருக்கப் போவதில்லை. இலங்கையை இந்தியா கவனித்துக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் தங்களுக்கு மட்டும்தான் இந்தியா உதவவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் சிங்களவர்களும் இந்தியாவிலிருந்து வந்தவர்களே; விஷ்ணுவின் அவதாரமாகத்தான் புத்தர் கணிக்கப் படுகிறார். இன்றும் ; பிரேமசந்திரன்போன்றவர்கள் தாங்கள்மட்டும்தான் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளும் என்று சொல்கிறார்கள். அது சரியான விடயமல்ல. அத்துடன் கொசாவோ பிரிந்தது போல் ஈழம் ஏன் பிரியக் கூடாது என்று கேட்கிறார்கள் இவர்கள் இந்தியாவைப்பற்றி ஆழமாக அலசவேண்டிய தேவையிருக்கிறது என்றார்.
அதைத் தொடர்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், தமிழ்ப்பகுதிகளில் அணுவாலய நிலயங்கள் அமைக்க சீனாவின் உதவியுடன் இலங்கை முயல்வது தப்பான விடயமல்ல. இலங்கைக்கு எண்ணெய், எரிபொருள் வசதி கிடையாது. இன்று பல நாடுகள் இப்படி முயற்சிகளை முன்னெடுக்கின்றன.
இலங்கை பொருளாதார வளர்ச்சி பெறவேண்டும். தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் பல சாட்டுக்களை வைத்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பொருளாதாரம்தான் முக்கிய பிரச்சினை. புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கு முன்னேற்றத்துக்கு உதவவேண்டும் இன்று ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த இந்தியர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடுகளைச் செய்கிறார்கள். அதேமாதிரி இலங்கைத் தமிழர்களும் செய்யவேண்டும்.
கடைசிக்காலகட்ட யுத்தத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுதம் கொடுக்கவில்லை. ஆனால் இராணுவபலத்தால் பிரச்சினை முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டும் என்று நினைத்தார்கள். யுத்தங்கள் கொடுமையானவை. எதிர்பார்க்க முடியாத அழிவைத் தருபவை. போர்க்குற்றம் சொல்லி ஐ.நா.வரை போவது பிரயோசனமற்ற விடயம்.இதனால் ஒரு பிரயோசமும் வராது.
இந்தியா.அமெரிக்கா என்று பல நாடுகள் போரில் அழிவுகளைக் காண்கிறது. இன்று தமிழர்களுக்குத் தேவையானது பொருளாதார அபிவிருத்தி அரசியல்த்தீர்வு என்பனவாகும் அதற்காகக் குரல் பொடுக்க வேண்டும் வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கு இந்தியா 500 கோடி ரூபாக்களையும் உலக வங்கி 575 கோடி ரூபாக்களையும் கொடுத்திருக்கிறது. இலங்கைத் தமிழரின் வாழ்க்கை வளத்திற்கு தமிழக்குழுக்கள் தங்கள் பேதங்களை மறந்து ஒன்று படவேண்டும். புதிய சிந்தனையும் புதிய அரசியல் மாற்றங்களும் வரவேண்டும். ஏன்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக