திங்கள், 15 நவம்பர், 2010

யுத்தம் ஒய்வடைந்த பின்னரும் தமது உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாக புளொட் தலைவர் குற்றச்சாட்டு!


கடந்த ஆண்டு மே மாதம் யுத்தம் ஒய்வடைந்த பின்னரும் தமது கட்சி உட்பட ஏனைய தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாக புளொட் தலைவரும் முன்னைநாள் வன்னி மாவட்ட பா.உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பி.பி.சி.சந்தேசியவுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

விடுதலை புலி உறுப்பினர்களிற்கு புனர்வாழ்வு மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்கிவரும் அரசு, ஏனைய தமிழ் அமைப்புகளிற்கு வழங்காமல் புறக்கணித்து வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் பாதகமான நிலைகள் இடம்பெறலாம் என்றும் தெரிவித்துள்ள சித்தார்த்தன். விடுதலை புலிகளின் முன்னைநாள் போராளிகளிற்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை எதிர்க்கவில்லை என்றும், அதற்காக ஏனையவர்கள் உதாசீனம் செய்யப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மகாணசபையின் முன்னைநாள் முதலமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் முக்கியஸ்தருமான அண்ணாமலை வரதராஜப்பெருமாளும் இதே குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: