Yuvan Swang :
இன்றைய மாபெரும் தலித் எழுச்சிப் பேரணியில் குறிப்பிடத்
தகுந்த விஷயங்கள்...
ஏதோ தலைவர்கள் அழைத்து விட்டார்கள்,போய் வருவோம் என்று கூடிய கூட்டம் அல்ல இது.
கூட வேண்டியதன் நோக்கத்தை உணர்ந்து கூடினார்கள்.
கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கூடினார்கள்.எதற்காக கூடினோம் என்பதை உணர்ந்து உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டார்கள்.
ஆங்காங்கே சிறு சிறு குழுவினராக தம் உரிமைகள் குறித்து உரக்க விளக்கமளித்தனர்.
தனித்தனி இயக்கத்தினராக இல்லாமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தோழமையோடு இணைந்து செயல்பட்டனர்.
முதலில் கெடுபிடி காட்டிய காவல்துறையினர் கூட்டத்தினைப் பார்த்து விலகி நின்றாலும் கூட்டத்தினர் கட்டுகோப்போடு கண்ணியத்தைக் கடைபிடித்தனர்.
தலைவர்கள் எல்லாம் ராஜ்பவனுக்குள் நுழைந்த நிலையில் சைதாப்பேட்டைக் கோர்ட் எதிரில் தடுத்து நிறுத்தப்பட்ட கூட்டத்தினர் தாங்களும் ராஜ்பவன் வாசல் வரை செல்வோம் என்று முரண்டு பிடித்ததை அறிந்த தோழர் திருமா ராஜ்பவனிலிருந்து தம் வாகனத்தில் வந்து சமயோசிதமாக ஒரு காரியத்தைச் செய்தார்.
தம் வாகனத்தின் மீது ஏறிக் கொண்டு கூட்டத்தினரோடு இணைந்து தாமும் கோஷமிட்டு இறுதியாக, இதை இப்படியே விட்டு விட மாட்டோம்.சாதகமான நடவடிக்கைகள் வராவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்துவோம் என்று உறுதியளித்து கூட்டத்தினர் கலைந்து போகச் செய்தார்.
ஆக மொத்தம் இராணுக்கட்டுப்பாட்டை தன்னிச்சையாக கடைபிடித்த கூட்டம் இன்றைய எழுச்சிப்பேரணி என்றால் மிகையில்லை.
அமைப்பாக திரள்வோம்,உரிமைகளை வென்றெடுப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக