தினபூமி :சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து
ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட் நேற்று
தீர்ப்பளித்தது. அதில் தமிழக சட்டசபையில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்ற
உத்தரவிட முடியாது என்று கூறியதோடு வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
சென்னை
ஐகோர்ட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவில்,
ஜெயலலிதாவின் படம் அரசு அலுவலகங்களில் இடம் பெறக்கூடாது என நான் தொடர்ந்த
வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 12- ம்
தேதி தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து
வைக்கப்பட்டுள்ளது.அவரது படத்தை சட்டசபையில் திறந்து வைப்பது
சட்டவிரோதமாகும். எனவே படத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த
வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ்
அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை முடிவில் நேற்று
தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் சட்டசபையில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்ற
உத்தரவிட முடியாது. சபாநாயகர் முடிவு மீது தலையிட முடியாது என்று
கூறியதோடு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக