திரிபுரா மின்னம்பலம் :முதல்வர் பிப்லப் குமார் தேபின் கருத்து, தன்னை காயப்படுத்தியுள்ளதாக உலக அழகி டயானா வருத்தம் தெரிவித்துள்ளார்.
திரிபுரா முதல்வராக சில மாதங்களுக்கு முன் பதவியேற்றவர் பாஜகவைச் சேர்ந்த பிப்லப் குமார் தேப். இவர் அகர்தலா நகரில் கைத்தறி பயிற்சிப் பட்டறை ஒன்றில் நேற்று முன்தினம் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில், “சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் சந்தையைத் தக்கவைக்க அதிக கவனம் எடுத்துக்கொள்கின்றன. அதற்காகவே இந்தியாவிலிருந்து இதுவரை ஐந்து பேரை உலக அழகி பட்டத்துக்குத் தேர்வு செய்துள்ளனர். டயானா ஹைடன்கூட 1997இல் உலக அழகி பட்டம் வென்றுள்ளார். ஆனால் அவரிடம் இந்திய அழகை நான் காணவில்லை. ஐஸ்வர்யா ராயிடம் மட்டுமே அந்த அழகு உள்ளது” என்றார்.
டயானா குறித்த அவரின் விமர்சனத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. இது தொடர்பாக சமூக ஆர்வலர் கவிதா கிருஷ்ணன், “பிப்லப் குமார் தேபின் இந்தக் கருத்து முட்டாள்தனமானது” என்றும், டெல்லி முதல்வரின் ஆலோசகர் நாகேந்தர் சர்மா, “திரிபுரா முதலமைச்சரின் இந்தக் கருத்து இந்த ஆண்டின் முட்டாள்தனமான கருத்து” என்றும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இது குறித்து உலக அழகி டயானா, “முதல்வரின் இந்தப் பேச்சு என்னைக் காயப்படுத்தியுள்ளது. நாம் இந்தியர்கள், நமது தோல் நிறம் பழுப்பு. அழகான, கவர்ச்சியான பழுப்பு நிறம் எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக