டெல்லி: காவிரி விவகாரத்தில் 2 வாரம் கேட்ட கால அவகாசத்தை மத்திய அரசு
வாபஸ் பெற்றுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை
செயல்படுத்த செயல் திட்டத்தை 6 வார காலத்திற்குள் மத்திய அரசு ஏற்படுத்த
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம்
கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
Cauvery: Centre seeks 2 weeks time to prepare framework to implement
verdict
மேலும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாதம் அவகாசமும் கேட்டது.அதேசமயம்
தீர்ப்பை அமல்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட்
அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
விசாரித்த சுப்ரீம் கோர்ட், மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு செயல்
திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த காலக்கெடு முடிய இன்னும் 5
நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில்
புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை உருவாக்க
அளிக்கப்பட்ட கால அவகாசம் போதவில்லை என்றும், மேலும் 2 வாரம் அவகாசம் தேவை
என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் 2 வாரம் கேட்ட கால அவகாசத்தை மத்திய அரசு
வாபஸ் பெற்றுள்ளது. தலைமை வக்கீல் அறிவுறுத்தல் பேரில் மனுவை மத்திய அரசு
வாபஸ் பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக