Mayura Akhilan - Oneindia Tamil . சென்னை: இந்திய அரசியலில் அதிமுகவும், பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது என்று நமது புரட்சித்தலைவி அம்மா கட்டுரை வெளியிட்டுள்ளது.
எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதிமுக. - பாஜக உறவை யாராலும் பிரிக்க
முடியாது. மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்க
முடியாது என்றும் இந்த உறவைக் கெடுக்க நினைக்கும் திமுகவின் திட்டம்
பலிக்காது என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மாவில் நேற்று
கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
திமுக போராட்டம் செல்லாது
திமுக போராட்டம் செல்லாது
தமிழகத்தை ஆளும் அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக ஆகிய இரு கட்சிகளின்
ஒற்றுமையைச் சீர்குலைக்க, மக்கள் செல்வாக்கற்ற, போராட்டங்களை திமுக.
திட்டமிட்டு நடத்தி வருகிறது. அவர்கள் நடத்தும் தேவையற்ற போராட்டங்கள்
அனைத்தும் கடலில் கரைத்த பெருங்காயம் போல் விரைவில் மறைந்துவிடும்.
காவிரி பிரச்னையில் மத்திய - மாநில அரசுகள் இணக்கமான முடிவுகளை
எடுத்துவரும்போது, கூட்டணி கட்சிகளின் துணையோடு போராட்டங்கள் என்ற பெயரில்
வன்முறை கலாசார விதைகளை தமிழகத்தில் தூவிவிடும் முயற்சியில் திமுக தீவிரம்
காட்டி வருகிறது. சுயநலங்களோடு திமுக. நடத்துகிற போராட்டங்களை, தமிழக
மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
போராட்டம் தோல்வியடையும்
போராட்டம் தோல்வியடையும்
எனவேதான், போராட்டங்களுக்கு ஆதரவளிக்க தமிழக மக்கள் முன்வரவில்லை. கூடிய
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கத்தான் போகிறது. அதில் திமுக
கூட்டணிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டத்தான் போகிறார்கள்.
அதற்காகத்தான் தமிழக அரசும் பொறுமை காக்கிறது. மக்கள் ஆதரவற்ற திமுகவின்
போராட்டங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவிய வண்ணம் இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையோடு,
மத்தியில் ஆளும் பாஜகவும் தமிழகத்தை ஆளும் அதிமுகவும் ஒருங்கிணைந்து
பொறுப்புடன் செயல்பட்டு, இறுதி முடிவினை எட்டிக் கொண்டிருக்கிறது. எங்கே
இருவரும் ஒற்றுமையாக இருந்து காவிரி பிரச்னையில் வெற்றி
அடைந்துவிடுவார்களோ? என்ற அச்சம் கொண்டிருக்கும் திமுக, தேவையற்ற
போராட்டங்களை நடத்தி வருகிறது.
எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதிமுக. - பாஜக உறவை யாராலும் பிரிக்க
முடியாது. மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்க
முடியாது என்றும் இந்த உறவைக் கெடுக்க நினைக்கும் திமுகவின் திட்டம்
பலிக்காது.
அதிமுக - பாஜக கூட்டணி
அதிமுக - பாஜக கூட்டணி
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டிலேயே அதிமுக - பாஜக இணைந்து செயல்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், 2019 லோக்சபா தேர்தலில் இரு கட்சிகளும்
கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து
கூறியுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக