செவ்வாய், 24 ஏப்ரல், 2018

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'.. உ.பி., பீஹார், ம.பி., ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர்

தினமலர் :மனித வள மேம்பாட்டு குறியீடு பட்டியல், கிழக்கு பகுதி
மாநிலங்கள், நிதி ஆயோக், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கந்த்.
புதுடில்லி:  உலகளவில் இந்தியா பின் தங்கிய நிலையில் இருக்க, உ.பி., பீஹார், ம.பி., ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களே காரணம் என நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கந்த் கூறியுள்ளார். கிழக்கு பகுதி மாநிலங்கள் டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் நடந்த கான் அப்துல் கபார் கான் நினைவு சொற்பொழிவு கூட்டத்தில் அமிதாப் கந்த் பேசியதாவது: இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
கிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து பின் தங்கி வருகின்றன. குறிப்பாக, பீஹார், உ.பி., சத்தீஸ்கர், ம.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் தான் உலகளவில் சமூக முன்னேற்ற விஷயத்தில் இந்தியா பின் தங்கிய நிலையில் இருக்க காரணம். தொழில்கள் முன்னேற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஆனால், மனித வள மேம்பாட்டு குறியீடு பட்டியலில் நாம் பின்தங்கிய நிலையில் உள்ளோம். அப்பட்டியலில் 188 நாடுகள் இடம் பெற்றுள்ளன. நாம், 131வது இடத்தில் இருக்கிறோம். கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியா பின் தங்கிய நிலையில் உள்ளது. மாணவர்களின் கற்றல் திறமை மோசமாக உள்ளது. ஐந்தாவது வகுப்பு மாணவனால், இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியவில்லை. குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்த துறைகளில் நாம் முன்னேற்றம் காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்;

கருத்துகள் இல்லை: