மாலைமலர் :நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை காமராசர்
பல்கலைக்கழக பேராசிரியர் முருகனிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை
நடத்தி வந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
மதுரை:<
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை
நிர்மலாதேவி அக்கல்லூரியை சேர்ந்த 4 மாணவிகளை செல்போன் மூலம் தவறான
பாதைக்கு அழைத்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அவர்
மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு
மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தூர் மாஜிஸ்திரேட்டு அனுமதியுடன்
நிர்மலாதேவியை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து கடந்த 20-ந்தேதி முதல்
விசாரித்து வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் போது நிர்மலாதேவி ஏற்கனவே மாவட்ட போலீசாரிடம் தெரிவித்தபடியே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை செல்போனில் தொடர்பு கொண்டதாக தெரிவித்தார்.
அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அந்த 2 பேராசிரியர்களையும் தேடி வந்தனர். கருப்பசாமி தலைமறைவான நிலையில், பேராசிரியர் முருகன் நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு வருகை பதிவேட்டில் கையெழுத்து போட வந்த போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக