tamil.oneindia.com :" சென்னை : பெண்பத்திரிக்கையாளர்கள் பற்றி இழிவான
கருத்தை பகிர்ந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமின் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கருத்தை பகிர்ந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமின் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வேறொருவரின் கருத்தை படிக்காமல் பகிர்ந்ததாகவும், இதற்காக
மன்னிப்பும் கேட்டுவிட்டதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என்றும் எஸ்.வி.
சேகர் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தில்
தட்டிய விவகாரம் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி இழிவாக
பதிவிட்டவரின் கருத்துகளை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததால் பிரச்னை
திசை மாறியது. வரிக்கு வரி கொச்சையான வார்த்தைகளால் பெண்
பத்திரிக்கையாளர்களை ஆபாச அர்ச்சனை செய்யும் அந்தப் பதிவு ஊடகத்துறையினர்
மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதறு செய்தியாளர்கள் கண்டனம்
தெரிவித்த நிலையில் பதிவை படிக்காமல் பகிர்ந்து விட்டேன் என்று மன்னிப்பு
கேட்டதோடு, அந்தப் பதிவையும் தனது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கினார்.
To escape from arrest S.Ve.Shekher approached court for bail
இந்நிலையில் எஸ்.வி.சேகர் நேரில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி
பத்திரிக்கையாளர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட
போது கல்வீச்சுத் தாக்குதல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு அமைப்பு சென்னை மாநகர காவல்
ஆணையரிடம் மனு அளித்திருந்தார்.
இந்தப் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையர் மத்திய
குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் எஸ்.வி.சேகர்
மீது பெண்களை அவமதித்தல், அவதூறு கருத்துகளை பரப்புதல், இரு பிரிவினரிடையே
மோதலை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எஸ்.வி.சேகர்
முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி எஸ்.வி.சேகர் இன்று மனு தாக்கல்
செய்துள்ளார். இந்த விவகாரத்தில் தான் நிபந்தனையற்ற மன்னிப்பு
கேட்டுவிட்டதாகவும், வேறு ஒருவரின் பதிவை படிக்காமல் பார்வேர்டு செய்து
விட்டதாகவும் எஸ்.வி.சேகர் குறிப்பிட்டுள்ளார். உள்நோக்கத்துடனோ, குற்ற
எண்ணத்துடனோ பதிவை பகிரவில்லை என்பதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று
எஸ்.வி.சேகர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு நாளையோ அல்லது நாளை மறுதினமோ
நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக