மின்னம்பலம் : 11எம்.எல்.ஏ.க்கள்
வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர்
ஸ்டாலின், “சபாநாயகருக்கு அறிவுறுத்த முடியாத நிலையில், எதற்காக மனுக்களை
விசாரணைக்கு எடுத்து, இத்தனை காலம் தீர்ப்பினைத் தள்ளி வைத்திருக்க
வேண்டும் என்பது சாதாரண மக்களின் கேள்வியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக கொறடா அர.சக்கரபாணி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நேற்று (ஏப்ரல் 27) தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு, சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று குறிப்பிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது.
மேலும் ஜெயலலிதா உருவப் படம் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் இந்த இரு வழக்குகளின் தீர்ப்புகள் குறித்தும் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “சாதாரண மக்களின் நம்பிக்கைக்குரிய ஜனநாயக அமைப்பு நீதிமன்றம். அதன் மீது அனைத்துத் தரப்பினரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவின் (ஓபிஎஸ் அணி) எம்.எல்.ஏக்கள் 11 பேரின் தகுதி நீக்கம் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ‘எம்எல்ஏக்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என சபாநாயகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது’ எனத் தெரிவித்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தாலேயே குற்றம் நிரூபிக்கப்பட்ட ஏ-1 ஜெயலலிதா அம்மையாரின் படம் சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டதை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கிலும் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலையிட முடியாத நிலையில், எதற்காக மனுக்களை விசாரணைக்கு எடுத்து, இத்தனை காலம் தீர்ப்பினைத் தள்ளி வைத்திருக்கவேண்டும் என்பதே சாதாரண மக்களின் கேள்வியாகும்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
அந்தக் கேள்வியைப் பிரதிபலிக்கும் பொருட்டு, நீதித் துறை மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக