மாலைமலர் :தலைமை நீதிபதி மீதான தகுதி நீக்க
தீர்மானத்தை துணை ஜனாதிபதி நிராகரித்துள்ள நிலையில், இதனை எதிர்த்து
சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உள்ளதாக கபில் சிபில் கூறியுள்ளார்.
புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மாநிலங்களவை தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்திருந்தனர். மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள ஏழு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 64 எம்.பி.க்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர்.
இது தொடர்பாக நேற்று வெங்கையா நாயுடு மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலுடன் ஆலோசனை நடத்தினார்.
சட்ட அமைச்சக முன்னாள் செயலாளர் பி.கே.மல்கோத்ரா, சட்டசபை முன்னாள் செயலாளர் சஞ்சய் சிங் ஆகியோருடனும் வெங்கையா நாயுடுவிவாதித்தார்.
இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் நோட்டீசை நிராகரிப்பதாக வெங்கையா நாயுடு தெரிவித்திருந்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில், “வெங்கையா நாயுடு நோட்டீஸை நிராகரித்துள்ளது மக்களின் நம்பிக்கையை தகர்ப்பதாக உள்ளது. துணை ஜனாதிபதியின் இந்த முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டின் இறுதி முடிவுக்கு உடன் படுகிறோம்” என கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக