புதன், 25 ஏப்ரல், 2018

விஜயகாந்த் விரும்பியதை இரண்டு தரப்பிலும் இரண்டு பெண்மணிகள் விரும்பவில்லை. ...

LR Jagadheesan : இந்த பேட்டியில் விஜயகாந்த் தெரிவித்திருக்கும் கீழ்கண்ட செய்தி பெருமளவு உண்மை என்பது திமுகவில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். குறிப்பாக அன்பழகனுக்கு அடுத்தபடியாக திமுகவிலிருக்கும் இரண்டாம்கட்ட மூன்றாம்கட்ட மூத்த தலைவர்கள் அனைவருக்கும் அப்போதே தெரிந்த உண்மையை இப்போது விஜயகாந்த் வெளியில் கூறியிருக்கிறார். திமுகவுடன் கூட்டணி வைக்க விஜயகாந்த் விரும்பியதை இரண்டு தரப்பிலும் இரண்டு பெண்மணிகள் விரும்பவில்லை. தேமுதிக தரப்பில் பிரேமலதாவுக்கு இதில் நாட்டமில்லை. வெங்கையா நாயுடு மூலம் பாஜகவின் நாயுடு lobby அதை எதிர்த்து வேலை செய்தது. அதற்கான பிரதிபலன்கள் வேறு. திமுக தரப்பில் ஸ்டாலின் வீட்டம்மையாருக்கும் ஏனோ இதில் ஆர்வமில்லை. திமுகவை தேடிவந்து சேர்ந்த நடிகை குஷ்புவை கட்சியில் இருந்து அடித்து விரட்டிய அந்த “நல்ல உள்ளங்கள்” கூட்டணிக்காக காத்திருந்த விஜயகாந்தை உரியமுறையில் பேசி சரி செய்து சேர்த்து வைக்க கட்சியின் மூத்த தலைவர்களை அனுப்பாமல் அந்த பொறுப்பை தன் மருமகனிடம் அளித்தார்கள் ஸ்டாலின் குடும்பத்தார்.
அந்த கத்துக்குட்டியோ அடுத்த ஆட்சி நம்மது தான் என்கிற அகந்தையில் விஜயகாந்தை கூட்டணிக்குள் சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. உரிய மரியாதையோடு விஜயகாந்தை அணுகவில்லை. வந்த அழைப்புகளையும் உதாசீனப்படுத்தி மநகூ பக்கம் அவரை தள்ளிவிட்டார்கள். ஆக இருவீட்டு அம்மணிகளின் ஆணவம், அரசியல் கடந்த தனிப்பட்ட ஈகோக்கள் மற்றும் வேறு பல காரணிகளால் இரு கட்சிகளுமே தேர்தலில் தோற்றன. ஜெயலலிதா எளிதில் வென்றார். இனிமேல் விஜயகாந்த்தோ அவரது தேமுதிகவோ தமிழக அரசியலில் தேறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதற்கான சூழலும் இல்லை. வெங்கையா நாயுடுவின் தயவில் பாஜவில் ஐக்கியமாகி நாயுடு வாக்குகளில் ஒரு பகுதியை பாஜகவுக்கு மடைமாற்றும் வேலையை மட்டுமே இனி பிரேமலதாவால் செய்ய முடியும். ஆனால் திமுகவின் செயல் தலைவரோ சென்ற தேர்தலில் செய்த அதே தவறை, திமிர் பிடித்த தன் குடும்பத்தவரை வைத்து கூட்டணி கட்சிகளை கிள்ளுக்கீரையாக நடத்தும் ஆணவத்தை கைவிடாவிட்டால் அடுத்த தேர்தலிலும் அரியணை கைக்கு எட்டினாலும் வாய்க்குள் விழாத விபரீதம் நடக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.


திருந்தினால் மட்டுமே அரியணை சாத்தியம். இல்லாவிட்டால்.... விடுங்கள் அதை ஏன் நம் வாயால் சொல்லவேண்டும்?
“கருணாநிதிக்கு உடல் நலம் குன்றியபோது முதல் ஆளாகச் சென்று அவரை சந்தித்து உடல் நலம் பற்றி விசாரிக்க நான் விரும்பினேன். அவருடன் நீண்ட நாட்கள் பழகியுள்ளேன். பல தடவை உடனுக்குடன் நேரில் சந்தித்துப் பேசி உள்ளேன்.
ஆனால், இம்முறை அவரைச் சந்திக்க முடியவில்லை. நான் வேறு வழியில் முயற்சி செய்தேன். அப்போது ஸ்டாலினிடம் பேசுங்கள் என்று சொன்னார்கள். பிறகு ஸ்டாலின் தரப்பிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு பேசினார்கள். கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் மீண்டும் பேசிய அவர்கள் உரிய நேரத்தில் அழைப்பதாகச் சொன்னார்கள். ஒருநாள் அவர்கள் தரப்பிலிருந்து பேசினார்கள். இன்று சூரசம்ஹாரம் என்பதால் நாள் சரி இல்லை என்று சொன்னார்கள்.
நானும் சரி என்றேன். நல்ல நாளில் கருணாநிதியை சந்திக்கலாம் என்று இருந்தேன். அவர்கள் எங்களை அனுமதிக்கவே இல்லை. அதன் பிறகு நானும் சந்திக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டேன்.
கருணாநிதியைச் சந்திக்க வேண்டும் என்று முதல் ஆளாக நான் கேட்ட போதும் அவரை நான் சந்தித்துப் பேசக் கூடாது என்று ஸ்டாலின் திட்டமிட்டுத் தடுத்துவிட்டார். ஸ்டாலின் ஏன் என்னைப் பார்த்து பயப்பட்டார் என்று தெரியவில்லை” என்று கூறிய விஜயகாந்த், 2016 சட்டமன்றத் தேர்தல் பற்றியும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“2016ஆம் ஆண்டு தேர்தலின்போது திமுக தரப்பிலிருந்து என்னிடம் கூட்டணிக்காகப் பேசப்பட்டது. திமுகவுடன் கூட்டணி அமைக்க நாங்களும் தயாராகவே இருந்தேன். திமுகவிடம் 60 தொகுதிகள் ஒதுக்கித் தரும்படி கேட்டேன். ஆனால் அவர்கள் 40 இடங்கள்தான் தர முடியும் என்றனர். அப்போது மட்டும், கூட்டணி ஆட்சிக்கு ஸ்டாலின் ஒப்புக்கொண்டிருந்தால் இன்று அவரும் நானும் அமைச்சர்களாக இருந்திருப்போம். 2016ஆம் ஆண்டில் முதல்வர் ஆகும் வாய்ப்பும் ஸ்டாலினுக்குப் பிரகாசமாக இருந்தது. ஆனால் அவர் அதை இழந்துவிட்டார்.

கருத்துகள் இல்லை: