Chinniah Kasi : தில்லியிலிருந்த ரோஹிங்கியா முகாமை நாங்கள்தான் கொளுத்தினோம்..
பாஜக இளைஞர் அணித் தலைவர் ஒப்புதல்
புதுதில்லி, ஏப்.20-
பாஜக இளைஞர் அணித் தலைவர் ஒப்புதல்
புதுதில்லி, ஏப்.20-
தில்லியில் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாமைத்
தீயிட்டுக் கொளுத்தியது நாங்கள்தான் என பாஜக-வின் இளைஞர் பிரிவான ‘பாரதிய
ஜனதா யுவ மோர்ச்சா’ஒப்புக் கொண்டுள்ளது.இதன் தலைவரான மணிஷ் சண் டேலா
என்பவர் தன்னுடைய ட்விட்டர் வலைப் பக்கத்தில் உண்மையை அவராகவே
வெளிப்படுத்தி இருக்கிறார்.தில்லியில் கலிண்டி குஞ்ச் பகுதியிலிருந்து
ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் முகாம் ஏப்ரல் 15 அன்று அதிகாலை 2.16
மணியளவில் தீக்கிரையாக் கப்பட்டது. அதனை நாங்கள்தான் தீவைத்துக்
கொளுத்தினோம் என்று சண்டேலா தன் ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 16 அன்று மாலை
5.42 மணியளவில் பதிவேற்றம் செய்துள்ளார்.“ஆம், நாங்கள் அதனைச் செய்தோம்.
ரோஹிங்கியாக்கள் இந்தியாவை விட்டு வெளியேறும்வரை மீண்டும் நாங்கள்
செய்வோம்,” என்று சண் டேலா அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
தற்சமயம் அந்தப் பக்கம் நீக்கப்பட்டிருக்கிறது.ரோஹிங்கியா அகதிகள் முகாம் தீக்கிரையானதில் அங்கிருந்த 200 குடும்பத்தினரின் உடைமைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகி விட்டன. அவர்களின் அடையாள அட்டைகள், ஐக்கியநாடுகள் அமைப்பு அளித்த சிறப்பு விசாக்கள் உட்பட அனைத்தும் எரிந்துசாம்பலாகி விட்டன என்பது குறிப்பிடத் தக்கது.இதனிடையே, ரோஹிங்கியா அகதிகள் முகாமிற்கு தீ வைத்த பாரதிய ஜனதாயுவ மோர்ச்சா மீதும், அதன் நிர்வாகிசண்டேலா மீதம் கிரிமினல் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக