மதுரை, இந்தியா: “அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.வுக்கு சரியான மாற்றுத் தேர்வு நாங்கள்தான்” என்ற கோஷத்தோடு அரசியலுக்குள் வந்த தே.மு.தி.க., கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த நிலையிலும், மிகப் பரிதாபகரமான முடிவை அடைந்திருக்கிறது. தமிழக மக்கள் அள்ளிக் கொடுப்பார்கள் என்று விஜயகாந்த் நினைத்திருக்க, மக்கள் கிள்ளிக்கூட கொடுக்கவில்லை.
தே.மு.தி.க.வின் தோல்வி எவ்வளது பரிதாபமா கட்டத்தில் உள்ளது என்பதைப் பார்க்க, ஒட்டுமொத்த ஆதரவுக்கு பிக்-பிக்சரை பாருங்கள். அடிமட்ட ஆதரவுக்கு டீப்-டீடெயில்ஸை பாருங்கள். இந்த இரண்டையும் பார்ப்பதற்கு இரு ஏரியாக்களில் அவர்கள் பர்ஃபோர்ம் பண்ணியிருப்பதைப் பார்த்தாலே போதுமானது.
பிக்-பிக்சராக, 10 மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் இவர்களுக்கு என்னாச்சு என்பதைப் பாருங்கள். டீப்-டீடெயிலாக, மதுரைக்குள் (விஜயகாந்தின் சொந்த மண்ணில்) இவர்களது கதி என்னனாச்சு என்பதையும் பாருங்கள். இந்த இரண்டுமே இவர்களது தற்போதைய நிலை பற்றி விளக்கமாக கூறிவிடக்கூடியவை.
மேயர் போட்டியில், சென்னையில் தே.மு.தி.க. 3வதாக வந்துள்ளது. ஆனால், வாக்கு வித்தியாசத்தைப் பாருங்கள். வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி பெற்ற வாக்குகளின் 10%-க்கும் குறைவான வாக்குக்களே தே.மு.தி.க.வுக்கு கிடைத்துள்ளது. “இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் நாமே மாற்றீடு” என்று இவர்களது கோஷம் இருப்பதால், தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் பெற்ற ஓட்டுக்களின் எண்ணிக்கைகளை கூட்டுங்கள். அந்த கூட்டுத்தொகையுடன், இவர்கள் பெற்ற வாக்குகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.
கிட்டத்தட்ட 5% வருகின்றது. இதை வைத்துக்கொண்டு, யாருக்கு யார் மாற்றீடாக வருவது? டெபாசிட்டே திரும்பி வராது!
திருச்சியைப் பாருங்கள். இவர்களுக்கு 3-வது இடம்கூட கிடைக்கவில்லை. ம.தி.மு.க.வின் ரொஹையா பீவி 37,618 ஓட்டுக்களைப் பெற்று 3வது இடத்தைப் பிடித்துக்கொள்ள, தே.மு.தி.க.வின் சித்ரா பெற்றது 30,471 ஓட்டுக்களைத்தான். அ.தி.மு.க., தி.மு.க. இரண்டும் சேர்த்து கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து எழுபது ஆயிரம் வாக்குக்களைப் பெற்றுள்ள நிலையில், இவர்கள் பெற்ற முப்பதாயிரம் வாக்குக்களை அதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
இன்றைய நிலையில் தே.மு.தி.க.வின் அக்ஸப்டன்ஸ் ரேட்டிங் கிட்டத்தட்ட இவ்வளவுதான். அதுவும் ஒற்றை இலக்கத்தில் உள்ள ரேட்டிங்.
இனி டீப்-டீடெயிலாக, மதுரைக்கு உள்ளே இவர்களது நிலையைப் பாருங்கள்.
5 வருடங்களுக்கு முன்னர், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க., மதுரை மாநகராட்சியில் பத்துக்கு மேற்பட்ட வார்டுகளை கைப்பற்றி ஆச்சரியப்படுத்தியது. இம்முறை, இவர்கள் பிரதான எதிர்க்கட்சியாக இருந்து, கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு பெற்ற வார்டுகளின் எண்ணிக்கை பூச்சியம்!
மதுரைக்குள் உள்ள 100 வார்டுகளில், 83 வார்டுகளில் தே.மு.தி.க.வும், 17 வார்டுகளில் கூட்டணிக் கட்சியினரான மார்க்சிஸ்ட்டுகளும் போட்டியிட்டனர். குறைந்த வார்டுகளில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சி 1 இடத்திலாவது ஜெயித்துள்ளது (63வது வார்டில் மாக்சிஸ்டு வேட்பாளர் செல்வம்) அதிக இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒன்றில்கூட ஜெயிக்கவில்லை. அட, அதை விடுங்கள், ஓரிரு வார்டுகளைத் தவிர மிகுதி வார்டுகளில் இவர்களால் 2-வது இடத்தைக்கூட எட்டிப் பிடிக்க முடியவில்லை!
“தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணி” என்ற கோஷத்தோடு அரசியல் பயணத்தை தொடக்கினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். “அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் உங்கள் வண்டவாளம்” என்று சவாலும் விட்டார்.
இம்முறை அவர்கள் தனித்துத்தான் போட்டியிட்டார்கள். சவால் விட்ட இவர்தான் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு களத்தில் இறங்கினார்.
யாருடைய வண்டவாளம், தண்டவாளம் ஏறியிருக்கிறது?
என்ன காரணம்? தேர்தல் சமயங்களில் மாத்திரம் அரசியல் செய்வது, லாங்-ரன்னில் காலை வாரிவிடும். ஆனால், விஜயகாந்தின் ஸ்டைலே அதுதான். தேர்தல் வராத நேரத்தில் இவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரிவதில்லை. வாயைத் திறந்தால்தானே கேப்டன் கேளம்பாக்கத்தில் இருக்கிறாரா? கோலாலம்பூரில் இருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள முடியும்?
கலைஞரைப் பாருங்கள். சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியடைந்து, பிரதான எதிர்க்கட்சியாகவும் இல்லாமல், சட்டசபைக்கும் செல்லாமல், அறிவாலயத்தில் இருந்து கொண்டு அரசியல் செய்யும் அதவிடமிருந்து தினத்துக்கு ஒரு அறிக்கை வருகிறது. அரசின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி விமர்சனம் வருகின்றது. திட்டுகிறாரோ இல்லையோ, தினம்தோறும் பேசுகிறார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறார்.
அரசியலில், பேசவேண்டும். அல்லது பேசப்பட வேண்டும். இல்லாவிட்டால் சங்குதான்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக