வியாழன், 27 அக்டோபர், 2011

ராஜ் ராஜரத்தினத்துடன் இணைந்து நிதி மோசடியில் ஈடுபட்ட ரஜத் குப்தா சரண்!

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜ் ராஜரத்தினத்துடன் இணைந்து மாபெரும் நிதி மோசடியில் ஈடுபட்ட இந்தியரான ரஜத் குப்தா நேற்று அமெரிக்காவில் எப்பிஐ அதிகாரிகளிடம் சரணடைந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் நிதி விவரங்களை மூலம் 75 பில்லியன் டாலர்கள் மோசடி செய்தார் ராஜரத்தினம்.அமெரிக்க வர்த்தக உலகில் இவ்வளவு பெரிய மோசடியை இதுவரை யாரும் செய்ததில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜரத்தினத்துக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் ராஜரத்தினத்துக்கு இந்த மோசடியில் உதவி செய்த இந்தியரான ரஜத் குப்தா மீதும் அமெரிக்காவின் எப்பிஐ காவல்துறையினர்; வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.

கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான ரஜத் குப்தா, தான் பணியாற்றிய புராக்டர் அண்ட் கேம்பிள், பெர்க்ஸைர் இன்வஸ்ட்மென்ட், கோல்ட்மேன் சேக்ஸ் மற்றும் மெக்கிங்ஸ்லி நிதி நிறுவனம் ஆகியவற்றின் நிதி விவரங்களை ராஜரத்தினத்துக்குத் வழங்கியுள்ளார்.

62 வயதான ரஜத் குப்தா அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்பட்ட இந்தியர் ஆவார். உலகின் முன்னணி நிறுவனங்களான புராக்டர் அண்ட் கேம்பிள், பெர்க்ஸைர் இன்வஸ்ட்மென்ட், கோல்ட்மேன் சேக்ஸ், மெக்கிங்ஸ்லி நிதி அமைப்பு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களில் மிக உயர்ந்த பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந் நிலையில் இப்போது இவர் மீது 6 நிதி மோசடி வழக்குகளைத் தொடர்ந்துள்ளது எப்பிஐ. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 105 வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: