பீஜிங்: சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து திபெத்தை சேர்ந்த புத்த மதத் துறவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுவரை 10 துறவிகள் இதுபோல் தற்கொலை செய்து கொண்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. திபெத்தை சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சுதந்திரம் வேண்டி திபெத்தியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்தே தங்களுக்கு என தனி அரசை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சீனாவின் பல நகரங்களில் திபெத்தை சேர்ந்த புத்த துறவிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னொரு புத்த துறவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து திபெத்தியர்கள் நடத்தி வரும் அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ÔÔகிழக்கு திபெத்தில் உள்ள கார்ஸ் பகுதியில் புத்த துறவி தவா செரிங் என்பவர், சீனாவின் ஆதிக்கத்தை கண்டித்து 25ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தீயில் எரியும் போது, Ôபுத்த மதத் தலைவர் தலாய் லாமா திபெத் திரும்ப வேண்டும். சீன அரசை கண்டித்து போராட வேண்டும். சுதந்திர திபெத்தில் எல்லோருக்கும் சம உரிமை கிடைக் வேண்டும்Õ என்று கோஷமிட்டார்ÕÕ என்று தெரிவித்தார். இதுவரை 10 புத்த மதத் துறவிகள் தற்கொலை செய்து கொண்டது சீன அரசுக்கு சர்வதேச அளவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக