புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உள்ளிட்ட சகல விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தயாரானதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
http://colombotelegraph.com/2011/10/28/wikileaks-american-assistance-to-track-prabakharan-2/
அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஒ பிளக்கிற்கும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பகிரங்கமாக அறிவித்தால் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.என்.பி. போன்ற சிங்கள தேசியவாத கட்சிகள் அதிருப்தி அடையக் கூடும் என கோதபாய தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமன்னிப்பு குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படாவிட்டால் அந்த முயற்சியில் பயனிருக்காது என பிளக் தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறுத்தம், பாதுகாப்பு வலயம் மற்றும் பொதுமக்களை மீட்டல் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் தகவல்களை வழங்கியுள்ளார்.
இதேவேளை, பிரபாகரன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முற்பட்டால் அவரைக் கைது செய்வதற்கு உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா இலங்கைக்கு உறுதியளித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி ரொபர்ட் ஓ பிளக்கினால் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. என கொழும்பு டெலிகிராப் தெரிவித்துள்ளது
தகவல்களை பார்வையிடுங்கள் http://colombotelegraph.com/2011/10/28/wikileaks-american-assistance-to-track-prabakharan-2/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக