ஞாயிறு, 23 அக்டோபர், 2011

Asha Bhosle Guinness record ஆஷா போஸ்லே கின்னஸ் சாதனை !


  பிரபல திரைப்பட பாடகி ஆஷா போஸ்லே (78), இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் 11,000 பாடல்களை பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். ‘தம் மாரோ தம்’, ‘மெஹபூபா மெஹபூபா’ (ஷோலே), ‘பியா தூ அப் தோ ஆஜா’ (காரவான்) மற்றும் ‘சுரா லியா ஹை தும்னே ஜோ தில் கோ’ (யாதோன் கி பாராத்) போன்ற பிரபலமான பாடல்களை பாடி புகழ் பெற்றவர் ஆஷா போஸ்லே. இவர் 1947க்கு பிறகு 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தனியாகவும் டூயட் மற்றும் கோரசாகவும் 11,000 பாடல்களை பாடி இருக்கிறார். ‘சிங்கிள் ஸ்டூடியோ ரிக்கார்டிங்குகளில்’ அதிக பாடல்களை பாடியதற்காக இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். லண்டனில் நடந்த ஆசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இதற்கான அத்தாட்சி ஆஷா போஸ்லேயிடம் வழங்கப்பட்டதாக டெல்லியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஷா போஸ்லே இது குறித்து கருத்து தெரிவிக்கையில், �உலக அங்கீகாரம் பெற்ற ஒரு பாடகராக இன்று நான் உணருகிறேன். அதிகபட்ச பாடல்களை நான் பாடியிருப்பது பற்றி எனக்கு தெரியும். இருந்தும் இதுபற்றி நான் இதுவரை எதுவும் சொன்னதில்லை.
விஷ்வாஸ் நெருர்கர்தான் இது குறித்த சரியான தகவல்களை கின்னஸ் நிறுவனத்துக்கு கொடுத்தார். இதன் காரணமாகவே எனக்கு இந்த பெயர் கிடைத்துள்ளது� என்றார். 20 மொழிகளில் 11,000 பாடல்கள்

கருத்துகள் இல்லை: