ஞாயிறு, 23 அக்டோபர், 2011

Air Canada Sri lankan ஏர்லைன்சுடன் இணைந்து கொழும்பு விமான சேவை!


மான்ட்ரியல், கனடா: ஏர் கனடா நிறுவனம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொழும்புவுக்கான தமது விமான சேவையை இம்மாதம் 27ம் தேதியில் இருந்து விஸ்தரிக்கின்றது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் ஏர் கனடா code-share agreement ரகத்திலான ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் வெளிவர்த்தக இணைப்பாளர் பட்ரிக் டீ-சொய்சா, “கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏர் கனடா, ஸ்ரீலங்காவுக்கான விமான சேவைக்கு புதிய பார்ட்னராக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தேர்ந்தெடுத்திருப்பது எமக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்” என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவில் இருந்து சென்ற சுமார் 3 லட்சம் மக்கள் கனடாவின் டொரண்டோ நகரில் மாத்திரம் வசிக்கின்றனர்.

ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர், கனடாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையிலான விமானப் பயணம் வருடத்துக்கு 10 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் கனடா நிறுவனத்தின் வைஸ் பிரெசிடென்ட் Yves Dufresne, “ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்த எமது புதிய சேவையில், கனேடியப் பயணிகள் கனடாவில் இருந்து ஐரோப்பாவின் லண்டன் அல்லது பிராங்பர்ட் ஊடாக கொழும்புக்கு பயணம் செய்யக்கூடியதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கனடாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையிலான ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஆண்டு (2010) 476 மில்லியன் டாலர் என்ற அளவில் இருந்தது. இதில் இறக்குமதியாக, 128 மில்லியன் டொலர் மதிப்பில் ஸ்ரீலங்காவில் தயாராகும் ஆடைகளை கனடா இறக்குமதி செய்துள்ளது. கனடாவில் இருந்து ஸ்ரீலங்காவுக்கு ஏற்றுமதியாகும் முக்கிய பொருள், கோதுமை.
ஏர் கனடா கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் மாத்திரமல்ல, உலக அளவில் வர்த்தக விமான நிறுவனங்களில் 15வது பெரிய நிறுவனமாக உள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் கனடாவின் 24வது வர்த்தக பார்ட்னாக இணைந்துள்ளது.

கருத்துகள் இல்லை: