மதுரை கலெக்டர் சகாயம், ரொம்பவும் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். அதே சமயம் சர்ச்சை நாயகரான மு.க.அழ கிரிக்கு நோட்டீஸ் அனுப்பியதன் மூலம், தானும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் சகாயம். அது என்ன நோட்டீஸ்?தயா பொறியியல் கல்லூரிக்காக அரசுக்கு சொந்தமான கண்மாய் பகுதிகளை மு.க.அழகிரி குடும்பத்தினர் ஆக்கிரமித்ததாக குற்றம் சாட்டி, இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அழகிரி மற்றும் அவர் மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி ஆகியோருக்கு கடந்த செப்டம்பர் 6-ந் தேதி மதுரை ஆட்சியர் சகாயம் நோட்டீஸ் அனுப்பி பலத்த பரபரப்பை ஏற்படுத்தினார். அழகிரியோ அப்படி எந்தவித ஆக்கிரமிப்பையும் செய்ய வில்லை என மதுரை உயர்நீதி மன்றத்தின் கதவைத் தட்டினார். இதைத் தொடர்ந்து கலெக்டர், அந்தக் குழு கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் நோட்டீஸைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதையெல்லாம் ’பூமராங்’ என்ற தலைப்பில் செப்டம்பர் 17-20 தேதியிட்ட நக்கீரன் இதழில் ரிப்போர்ட் செய்திருந்தோம்.
அந்த சர்ச்சை முழுதாக ஓயும் முன்பாக மு.க.அழகிரி பற்றி விசாரிக்கும்படி மற்றொரு நோட்டீஸை மாநகராட்சி ஆணையருக்கு தானே நேரடியாக அனுப்பியிருக்கிறார் சகாயம். எதற்காக? மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் கட்டப்பட்டிருக்கும் தயா சைபர் பார்க் கட்டிடத்துக்காக, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை அழகிரி ஆக்கிரமித்து விட்டார் என்பதுதான் நோட்டீஸின் சாராம்சம். அந்த நோட்டீஸில் சர்வே எண் 116/2பி 7-ல் 0.10 சென்ட் மற்றும் 116/2சி 6-ல் 0.04 நஞ்சை நிலம். மற்றும் மேற்படி இடத்திற்கு வட கிழக்கில் புல எண் 113/2 வண்டிப்பாதை புறம்போக்கில் 0.08 சென்ட் போன்றவை ஆக்கிரமிக்கப் பட்டதாக சுட்டிக்காட்டியிருப்பதோடு மேற்படி ஆக்கிரமிப்பு ஸ்தலங்கள் மாநகராட்சியால் குத்தகைக்கு ஏதும் விடப்பட்டிருப்பின் அதன் விபரத்தை தெரிவிக்கவேண்டும் . அவ்வாறு இல்லாத நிலையில் இதனை ஆக்கிரமிப்பாகக் கருதி அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உடனடியாக அகற்றி அரசு நிலத்தை சட்டத்துக்கு உட்பட்டு மீட்டிட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்''’என்று தெரிவித்திருக்கிறார் கலெக்டர். 4-ந் தேதி தயாரான இந்தக் கடிதம், பிரச்சாரத்துக்காக ஜெ.’மதுரைக்கு வந்த 13-ந் தேதி அன்று அனைத்துப் பத்திரி கைகளிலும் வரும் படி கலெக்டர் அலு வலகம் மூலமாகவே தகவல் கொடுக்கப் பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு ஆளும்கட்சி டி.வி. நிருபரை கலெக்டர் அலுவலகத்துக்கே வரச்சொல்லி, செய்தி வெளியிடும்படி கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது. ஜெ.’மதுரைக்கு வந்த நாளில் அழகிரிக்கு எதிரான இந்த செய்தி வெளி யாக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஏன் இத்தனை பரபரப்பு காட்டியது என்பதுதான் கேள்விக்குறி. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் நடராஜனிடம் கேட்டபோது ""தேர்தல் வேலைகள் முடிந்த பிறகுதான் அந்த நோட்டீஸ் குறித்த ஆய்வில் இறங்க முடியும். இப்போ தைக்கு எதுவும் சொல்லமுடி யாது''’என முடித்துக்கொண்டார்.அழகிரி தரப்பில் பேசிய தலைமைக் கழக பேச்சாளர் சலீமோ ""இவ்வளவு நாள், எந்த சாயமும் பூசிக்கொள்ளாதவராக இருந்த கலெக்டர் சகாயம், இப்போது ஜெ.’சாயத்தை பூசிக்கொண்டி ருக்கிறார். வேறென்ன சொல்ல?. இதையும் சட்டப்படி சந்திப் போம்''’என்கிறார் காட்டமாக.
அழகிரியைக் குறிவைத்து எய்யப்படும் நோட்டீஸ்கள், கலெக்டர் சகாயத்தைச் சுற்றியும் கூட சர்ச்சைச் சூறாவளிகளை எழுப்பிவருகிறது.
-முகில்
thanks nakkeran+KV Kumar chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக