ஞாயிறு, 23 அக்டோபர், 2011

அமெரிக்கர்கள் கோபத் ‘தீ’ யில் Wall Street


எங்களுக்கு வேலை இல்லை; குடியிருக்க வாடகை வீடு இல்லை. தண்ணீர் வரி கட்ட முடியாததால், குடிநீரும் ரேஷன் தான். நாங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். எங்கள் உடல் உழைப்பை, அதன் மூலம் கிடைத்த பணம், வசதிகளை எல்லாம் வர்த்தக, தொழில், நிதி நிறுவன பணமுதலைகள் ஆக்ரமித்துக்கொண்டு, எங்களை அடிமையாக்கி விட்டன.
* மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசு. ஆனால், பட்ஜெட்டில் வரி போடுவது, மானியத்தை ரத்து செய்வதெல்லாம் அதன் பின்னால் உள்ள இந்த பண முதலைகள் நிர்ணயிக்கின்றனர். ஓட்டு போட்டு அரசை தேர்ந்தெடுப்பது நாங்கள்; ஆனால், ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களை கையில் போட்டு ஆதிக்கம் செலுத்தி நாட்டை நடத்துவது இந்த பண முதலைகளா? எங்களுக்கு சமத்துவம் வேண்டும்; அமெரிக்காவில் உள்ள எல்லா வளங்களை, பணத்தை, வசதியை ஒரு சதவீத பண முதலைகள் அனுபவிக்க, 99 சதவீதம் அப்பாவி மக்கள் ஒதுக்கப்படுவதா? நாக ரிக அடிமை வாழ்க்கையை அனுபவிப்பதா? விடமாட்டோம் இனி.
இந்த கதறல் யாருடையது தெரியுமா? உலக போலீஸ்காரன் என்று பெயர் பெற்ற அமெரிக்காவின் பரிதாபத்துக்குரிய மக்களுடையது தான்.
சுருங்கச் சொன்னால், கடந்த ஒரு மாதமாக ‘ஆக்குபை வால் `ஸ்ட்ரீட்’ என்ற (வால்ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்) போராட்டம் நடக்கிறதே, அதற்கு அமெரிக்க மக்கள் சொல்லும் காரணமே இது தான்.

இவர்களின் ஒரே கோஷம், ‘கார்ப்பரேட் கிரீட்’ ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்பதே. அதென்ன கார்ப்பரேட் கிரீட்? மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்யும் அரசை இந்த பங்குச்சந்தை பணமுதலைகள் ஆட்டிப்படைப்பது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ளது ‘வால் ஸ்ட்ரீட்.’ வர்த்தக, பொருளாதார, நிதி வளங்களை நிர்ணயிப்பதே இங்கு ஏறும், இறங்கும் பங்கு மதிப்புகளால் தான். இந்த நிதி, முதலீட்டு வளங்களை ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்ல, அமெரிக்க ஆட்சியையும், அதன் ஒவ்வொரு துறைகளையும் ஆதிக்கம் செலுத்துவதே இந்த ‘வால் ஸ்ட்ரீட்’டை தங்கள் கையில் வைத்துள்ள முன் னணி நிதி, வர்த்தக, தொழில் நிறுவன பணமுதலைகள் தான் என்று சாமான்ய அமெரிக்கர்கள் உணரத்துவங்கி விட்டனர்.
பரபரப்பான செப்டம்பர் 21: வால்ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள சக்கோட்டி பார்க் என்ற பூங்காவில் சிலர் ஆளாளுக்கு கொண்டு வந்த கைடயக்க பிளாஸ்டிக் கூடாரத்தை விரித்து உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்தபோது மிகச்சாதாரணமாகத்தான் தெரிந்தது.

24 மணி நேரத்தில் பேஸ்புக், ஆர்க்குட் என்ற பல சமூக வளைத்தளங்களில் தகவல்கள் பறக்க, எதற்காக இந்த போராட்டம் என்று அமெரிக்க மாநிலங்கள் அனைத்திலும் உள்ள மக்கள் உணர்ந்து கொண்டனர். இதோ, ஒரு மாதத்தை தொட்டு விட்டது இந்த போராட்டம்.
பிட்சா, பர்கர் கிடைப்பது முதல், டாய்லெட், தற்காலிக பிளாஸ்டிக் கூடாரம் அமைத்து தருவது வரை ‘பக்கா’வாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று முன்வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மட்டுமல்ல, தனி நபர்களும் இன்டர்நெட் மூலம் கோடிகளை நன்கொ டையாக கொட்டி வருகின்றனர்.
இப்போது தினமும் ஆயிரம் பேர் இங்கு வந்து கூடி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். முன்னணி வர்த்தக, நிதி, தொழில் நிறுவன பணமுதலைகள் ஆதிக்கத்தில் இருந்து அரசை காப்பாற்ற வேண்டும்; எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே இவர்கள் கோரிக்கை.
ஆதிக்கம் உண்மை தான்: அமெரிக்காவில் தான் மகத்தான ஜனநாயகம் நடக்கிறது. அங்கு மனித உரிமை மிகவும் துல்லியமாக கடைபிடிக்கப்படுகிறது என்று சொல்வர். ஆனால், உண்மையில் பங் குச்சந்தையில் கொடிகட்டிப்பறக்கும், ஆதிக்கம் செலுத்தும் வர்த்தக, நிதி, தொழில் நிறுவனங்கள் தான் ஆட்சியை மறைமுகமாக நடத்துகின்றன என்பது புரியும். மக்களுக்கு இப்போது அது புரிந்து விட்டதால் தான் தெருவுக்கு வந்துள்ளனர்.
அமெரிக்காவில் உண்மையில் வித்தியாசமான ஜனநாயக முறை உள்ளது. அங்கு நடப்பது ‘ப்ளூட்டோகிரசி’ முறை ஆட்சி தான். அதாவது, பணம் இருப்பவர்கள், நிதி, வர்த்தக, தொழிலில் ஆதிக்கம் செலுத்துவோருக்கு ஆட்சியில் மறைமுகமாக பங்கேற்க வழி உள்ளது.

நிதி, பொருளாதாரம் முதல் ராணுவம் வரை பல துறைகளில் இந்த பணமுதலைகளின் ஆதிக்கம் உண்டு. மக்களுக்கு சலுகை தரலாம், வேண்டாம், வரி போடலாம், வேண்டாம் என்பதெல்லாம் பார்லி மென்ட்டில் முடிவு செய்யப்பட்டாலும், அதன் பின்னால் இவர்கள் இருக்கின்றனர்.
வேலையின்மை,
கடன் சுமை

அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு எல்லாமே எளிதாக கிடைக்கும். வேலையில் இருந்தால், இன்டர்நெட்டை தட்டினால், கார் வரும்; பங்களா வரும்; ஏன் அன்றாட காய்கறி வாங்கக்கூட, ஏன் பார்ட்டி கொண்டாட கூட வங்கி கடன் தரும்.
அதிலும் அமெரிக்கர்கள், வார இறுதியில் எல்லா பணத்தையும் பார்ட்டிகளில் செலவழித்து விடுவர். இப்படிப்பட்டவர்களின் கடன் சுமை விழிபிதுங்கி விட்டது. இப்படி ஒரு பக்கம் இவர்கள் சிக்கித்த விக்க, இவர்களுக்கு கடன் தந்த நிறுவனங்கள், வேலை தந்த நிறுவனங்கள் எல்லாம் நொடித்துப்போய் விட, கடைசியில் இவர்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர்.
இரண்டு பங்களா, நான்கு கார், வங்கியில் கோடியை தொடும் பேலன்ஸ் என்று இருந்த சொகுசு அமெரிக்கர்கள் கதி இப்படி ஆகி விட்டது.

பங்குச்சந்தையில் செயற்கையாக ஏறி இறங்குவதால் பல நிறுவனங்கள் மூட்டை கட்டின. பல ஆயிரம் பேருக்கு வேலை காலியாகி விட்டது.
வேலை இல்லாததால், அவர்கள் வீட்டுக்கடனுக்கு வீடு பறிபோய் விட்டது. காரில் பலரும் குடித்தனம் நடத்தினர். குடிநீர் கூட ரேஷன் என்ற நிலை ஆகி லட்சாதிபதி பணக்காரர்கள் எல்லாம் பிட்சாதிப தியாகி விட்டனர்.
இவர்கள் தான் இப்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.
முதல் முறையாக கைது: அமைதியாக நடந்து கொண்டிருந்த போராட்டத்தில் சமீபமாக தகிப்பு தெரிகிறது. வால்ஸ்ட்ரீட் பூங்காவில் இருந்து வாஷிங்டன் சதுக்கத்துக்கு ஊர்வலமாக சென்றவர்களில் சிலர், டைம் சதுக்கத்தில் உள்ள சிட்டி வங்கி கிளைக்குள் புகுந்து முற்றுகையிட்டனர்.
பிடிவாதம் பிடித்த 75 பேரை போலீஸ் வந்து பிடித்து சிறையில் தள்ளி விட்டது. கைது செய்வதை தடுத்த வேறு சிலரையும் சிறையில் தள்ளியது.

இனி இப்படிப்பட்ட கைதுகளை எதிர்பார்க்கலாம். அமைதியாக நடந்த போராட்டம், இனி சற்று திசை மாறலாம். வன்முறையும் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சிட்டி பாங்க் போல மற்ற வங்கிகளையும், நிதி மற்றும் வர்த்தக நிறுவனங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறிக்கலாம். அதனால் பெரும் பிரச்னை ஏற்படலாம் என்று சிஐஏ உளவு அமைப்பு அறிக்கை அனுப்பி விட்டது. அரசும் இந்த போராட்டத்தை கூர்ந்து கவனித்து வருகிறது.

ரு மாதமாக மவுனமாக இருந்த அதிபர் ஒபாமா, விடுமுறைக்கு வடக்கு கரோலினா செல்லும் முன் கூறுகையில்,‘என் அரசு எப்போதும் 99 சதவீத மக்களுக்காக தான். ஒரு சதவீத மக்களுக்கு அல்ல; எல்லாருக்கும் சம உரிமை, சலுகை, நியாயமான பங்கீடு இருக்கும்’ என்று உறுதி கூறினார். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் உள்ளவர்கள் இதை காதில் வாங்க தயாரில்லை. அவர்கள் கோரிக்கை, ‘ப்ளூட் டோகிரசி’ முறையை மாற்ற வேண்டும் என்பதே.
இன்றைய லாபம்; நாளை நஷ்டம்: குடிநீர் முதல் பெட்ரோலிய பொருட்கள் வரை இந்த பணமுதலைகள் ஆட்டிப்படைக்கின்றன என்று மக்கள் கருதுகின்றனர். சமீப காலமாக எந்த ஒரு வரிகளும், சலுகை ரத்தும் பொருளாதாரத்தில் வலுத்தவர்களுக்கு போடுவதில்லை.
இப்படியே போனால், இன்னும் பத்தாண்டில் அமெரிக்காவில் பெரும் அரசியல் சட்ட குழப்பம் ஏற்படும். நாடு சிதறும். வாஷிங்டன், நியூயார்க் என்று ஒவ்வொரு மாநிலத்தையும் ஒரு பணமுதலை ஆதிக்கம் செலுத்தும். முன்னாள் சோவியத் யூனியன் போல அமெரிக்காவும் சிதறும் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

ஆட்சிக்கு பின்னால் முன்னணி வர்த்தக, தொழில், நிதி நிறுவன அதிபர்கள் உள்ளதால், அவர்கள் எண்ணம் எல்லாம் லாப நோக்கில் தான் இருக்கும். உள்ளூரில் வரி போடுவது, மானியத்தை குறைப் பது முதல், ஈராக்கில் போரை நடத்துவது வரை, இவர்கள் தீர்மானித்தால் எப்படி இருக்கும்? ஈராக்கில் பல ஆயிரம் பேர் உயிரை விட்டது தீவிரவாதத்துக்காக அல்ல; எண்ணெய் வளத்துக்காக தான் என்று அமெரிக்க மக்கள் உதாரணம் காட்டுகின்றனர்.

இப்படி தான் அமெரிக்கர்களுக்கும் ஏகப்பட்ட கடனை தந்து, கடனாளி ஆக்கி, வேலையில்லாமலும் ஆக்கி விட்டனர். இன்னொரு பக்கம், அவர்கள் தான் பேஸ்ட், பவுடர் முதல் பிட்சா, பர்கர், கோக் வரை எல்லாவற்றையும் விற்பனை செய்கின்றனர்.
இந்த பொருட்கள் சப்ளை இல்லாவிட்டால் மக்கள் தவிக்க வேண்டும். அப்படி ஒரு நிர்ப்பந்தத்தை கொண்டு வருகின்றனர். இதற்கு உதாரணமாக மொபைல் போனை சொல்லலாம். மொபைல் போன் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு தள்ளி விட்டனர். இப்படியே போனால், எதிர்காலத்தில் அவர்களுக்கு முழு அடிமையாகத்தான் இருக்க வேண்டும்; சமத்துவம் இருக்காது என்றும் அமெரிக்க மக்கள் பயப்படுகின்றனர்.
1998 ல் ஆரம்பித்த புகைச்சல்: கடந்த 1998 ல் தான் அமெரிக்காவில் தனிநபர் கடன்சுமை, வேலையின்மை ஆரம்பித்தது. அடுத்த இரண்டாண்டுகளில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் படு வேகமாக நடந் தது. இதில் தான் பல நிறுவனங்களின் பங்கு மதிப்பு பல மடங்கு ஏறியது. அதன் மூலம் பலரும் செழிப்பானார்கள்.
அதே வேகத்தில் அடுத்த இரண்டாவது ஆண்டில் சரிய ஆரம்பித்தது. கம்பெனிகள் மூட ஆரம்பித்தன. பல ஆயிரம் பேருக்கு வேலை போச்சு. விளைவு, வீடு, கார், வசதிகளை விட்டு நடுத்தெருவுக்கு வந்து விட்டனர்.

ஆக்குபை வால்ஸ்ட்ரீட்’ போராட்டம் போல ஒரு போராட்டம் ஆரம்பிக்கும்; பெரிதாக வெடிக்கும் என்று 98 ல் உணர ஆரம்பித்தவர்கள் வெகு சிலரே. பலரும் இன்டர்நெட் ப்ளாக்குகளில் இது பற்றி எழுத ஆரம்பித்தனர்.
இப்போது லட்சக்கணக்கானவர்கள் கருத்துக்களை வெளியிட்டு, அமெரிக்காவின் நிலை பற்றி பீதியை கிளப்பி வருகின்றனர்.
99 சதவீத சாமான்ய மக்களுக்கும், ஒரு சதவீத ‘கார்ப்பரேட்’ பண முதலைகளுக்கும் இடையே ஓசைப்படாமல் நடந்து வரும் அமைதிப்புரட்சி, வரும் காலங்களில் பெரிதாக வெடிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
அதை அமெரிக்க அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது தான் பெரிய கேள்விக்குறி. இப்போதுள்ள நிலையில், வரம்பு மீறாமல் காணப்படும் போராட்டம் இனி அப்படி இருக்குமா என்பது சந் தேகம் தான்.
ஒரு பக்கம் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. இன்னொரு பக்கம் வரம்பு மீறுவதும் நடக்கிறது. கைதுகளும் தொடர்கிறது. இது நீடித்தால்...
அமெரிக்காவுக்கு ஒற்றைத் தலைவலி ஆரம்பித்து விட்டது என்பதே உண்மை.
பல நாடுகளிலும் கூட...
ஆக்குபை வால்ஸ்ட்ரீட்’ போராட்டம், சிகாகோ, வாஷிங்டன் என்று எல்லா மாநிலங்களிலும் பரவி விட்டது. போதாக்குறைக்கு ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் 180 நகரங்களில் பரவி விட்டது. ஆங்காங்கு மக்கள், சமத்துவம் கோரி போராட ஆரம்பித்து விட்டனர்.
ஏதோ நூறு பேரை கொண்டு ஆரம்பித்த இந்த ‘ஆக்குபை வால் ஸ்ட்ரீட்’ போராட்டம், ‘ஆக்குபை சிகாகோ, ஆக்குபை வாஷிங்டன், ஆக்குபை மேன்ஹாட்டன்...’ என்று பல நகரங்களில் கொடிகட்டிப்ப றக்க ஆரம்பித்து விட்டது. வெளிநாடுகளிலும் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து விட்டது.

இன்டர்நெட் மூலம் தொடர்பு கொள்வதால், பல நாடுகளிலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவுகள் பெருகிய வண்ணம் உள்ளது.
நியூயார்க்கில் போராட்டத்தை முதலில் ஆரம்பித்தது ஜஸ்டின் வேட்ஸ். சாதாரணமான பள்ளி ஆசிரியரான இவர் பின்னால் இப்போது ஆசிரியர்கள், தொழிலாளர்கள், வக்கீல்கள் என்று பல தரப்பி னரும் திரண்டுள்ளனர். காரணம், அவர் முன்வைக்கும் கோஷம் நியாயமானது என்பதால்.
பிரிட்டனில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் விக்கிலீக்ஸ் வளைதளத்தின் நாயகன் ஜுலியஸ் அசாஞ்ச் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த புரட்சிகர போராட்டங்களுக்கு பின்னணியில் இவர் பங்கு உண்டு என்றும் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை: