கல்லீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்ட மகளுக்கு அவரது தாயின் கல்லீரலில் மூன்றில் இரண்டு பகுதி சத்திரசி கிச்சையின் மூலம் பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 20 மணித்தியாலங்களாக இடம்பெற்ற இந்த சத்திரசிகிச்சை இருவரின் உயிருக்கும் எவ்வித பாதிப்புமின்றி வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.
கல்லீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்டிருந்த 20 வயதுடைய மகளுக்கே 50 வயதுடைய தாயின் கல்லீரல் பொருத்தப் பட்டுள்ளது. கொத்மலைப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே இந்த சிகிச்சை இடம்பெற்றுள்ளது.
இந்த சிகிச்சையைத் தொடர்ந்து இரண்டு மாதங்களின் பின்னர் மேற்படி இருவரும் இயல்பு நிலைக்கு வர முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சிகிச்சைக்கு இந்தியா, சிங்கபூர் மற்றும் மேற்குலக நாடுகளில் குறைந்தது ரூபா 8 மில்லியன் செலவாகும் எனவும் இந்நிலையில் இங்கு இலவசமாகவே இந்த சத்திரசிகிச்சைஇடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவத்துறை வரலாற்றில் இது ஒரு மைல்கல் என சத்திர சிகிச்சையில் ஈடுபட்ட டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது. சிறந்த தேர்ச்சிபெற்ற பிரபலமான வைத்திய நிபுணர் குழுவினராலே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக