கொழும்பு:இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் சூழ்ச்சி மீண்டும் தோல்வி கண்டுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் அறிக்கை முன்வைக்கப்படவிருந்தது.
இதற்கான முயற்சிகளை வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள இலங்கை பு தமிழர்களும், சர்வதேச நாடுகளும் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் இது தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஐ.நா.வுக்கான பிரதிநிதி என்ற வகையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாக்கும் பொறுப்பு ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு உள்ளதென சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூனுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது தனியான வழக்கு தொடரப் பட்டுள்ள போதும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அவர் முகம் கொடுப்பதற்கான சகல உதவி ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக