புதன், 28 செப்டம்பர், 2011

பொது மன்னிப்பால் சவுதியில் இருந்து 50,000 இந்தியர் நாடு திரும்பினர்

வேலைக்கான விசா, ஹஜ் பயணம் மற்றும் சுற்றுலா விசாவில் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் சவுதி செல்கின்றனர். இவர்களில் பலர் விசா காலம் முடிந்த பின்னரும் அங்கு தங்கியுள்ளனர். இவர்களின் பெரும்பாலோர் திறமையற்ற ஊழியர்கள். அவ்வாறாக சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் மீது அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. அதனால் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

இதையறிந்த இந்திய தூதரக அதிகாரிகள் சவுதி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய தூதரகத்தின் தீவிர முயற்சி காரணமாக சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுக்கு சவுதி அரசு பொது மன்னிப்பு வழங்கியது. இதையடுத்து சவுதியில் இருந்து இதுவரை 50,000 பேர் நாடு திரும்பியுள்ளனர் என்று இந்திய தூதரக முதன்மை செயலர் பருபால் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: