செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பதுங்கி இருந்த தமிழினிக்கு புனர்வாழ்வு,2009=05-27 இடம்பெயர் முகாம் ஒன்றில்

புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது!

புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சிவகாமி எனப்படும் தமிழினிக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழினிக்கு புனர்வாழ்வு அளித்து மீளவும் சமூகத்துடன் இணைப்பது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம், தமிழினியின் சட்டத்தரணிக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

கொழும்பு நீதிமன்றின் பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழினி குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழினியின் இளமைக் காலத்தை புலிகள் பறித்துக் கொண்டதாகவும், தற்போது அவர் சிறையில் வாடுவதாகவும் சட்டத்தரணி நீதிமன்றில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி இடம்பெயர் முகாம் ஒன்றில் வைத்து பதுங்கி இருந்த தமிழினியை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆயிரக்கணக்கான சிறார்களுக்கு சயணிட் குப்பி கொடுத்த தமிழினி மக்களோடு மக்களாக அகதி முகாமில் சரணடைந்தார். கொடூரமே உருவான புலிகளுக்கும் அபயம் அளித்தனர் அரச படையினர்.


இதேவேளை, தமிழினி தொடர்பான விசாரணை அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: