புதன், 28 செப்டம்பர், 2011

விஜயகாந்த் தளம்பல் நழுவல் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையாம்

தனியாக கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்: செய்தியாளர்களிடம் விஜயகாந்த்
தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் (27.09.2011) சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
கேள்வி:; இதற்கு முன்பு தெய்வத்துடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்று கூறியிருந்தீர்கள். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தீர்கள், இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுடன் கூட்டணி வைத்திருக்கீறிர்களே?
பதில்: இதுபற்றி நீங்கள் தனியாக கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன். உள்ளாட்சி தேர்தலின் போது நான் 20 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் போது நீங்கள் கேட்கக்கூடிய இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறுவேன். ஒரே நாளில் எல்லா கேள்விகளுக்கும் பதிலை கொட்டவேண்டிய அவசியமில்லை. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

கருத்துகள் இல்லை: