சனி, 1 அக்டோபர், 2011

யாழ். குடா கிறீஸ் பூத பின்னணியில் இந்தியர்களும் புலம் பெயர் தமிழர்களும்

-மேஜர் ஜெனரல் மஹிந்த அதுருசிங்க! 

யாழ். குடாவில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைக்கும் சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் உல்லாசப் பயணிகளாக இலங்கை வந்து யாழ். குடாவுக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரஜைகளின் ஒரு குழுவினரே காரணம் என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அதுருசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான சுமார் 17 பேரைக் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். குடாவில் ஏற்பட்டுள்ள கிறீஸ் பூத விவகாரத்தின் பின்னணியில் இவர்களது தொடர்பும் இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள அவர், இவர்களுக்கும் புலம் பெயர் தமிழர்களுக்கும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: