எஸ்பிபி சரண் என்னிடம் பகிரங்கமாக, அதுவும் மீடியா முன்பாக வந்து மன்னிப்பு கேட்டால்தான் வழக்கு வாபஸ் என்று கூறிவந்த சோனா, நேற்று வரை தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
ஆனால், போலீஸார் இந்த வழக்கில் யாருக்கு சாதகமாக உள்ளனர், அவர்களின் 'ட்ரீட்மென்ட்' போன்றவை புரிந்ததும், தானாகவே அமைதியாகிவிட்ட சோனா, இன்று இந்த வழக்கையே வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டார். சரணை தான் மன்னித்துவிட்டதாகவும் கூறினார். ஆனால், இந்த விவகாரத்தில் பிரதானமாகக் குற்றம்சாட்டப்பட்ட சரண், இதுவரை எதுவுமே பேசவில்லை. அவர் சார்பாக பேச வேண்டியதையெல்லாம் 'மேலிட அறிவுறுத்தலின் படி' போலீசாரே 'பேசிவிட்டதாக' விவரமறிந்த வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், சரணை மன்னித்ததாக அறிவித்த கையோடு, வெளிநாடு பறந்துவிட்டார் சோனா. போவதற்கு முன் நிருபர்களிடம் பேசிய சோனா, மனசே சரியில்ல. எதையும் வெளிப்படையா பேச முடியாத நிலை. நான் எல்லாவற்றையும் மறந்துட்டேன். கொஞ்ச நாளைக்கு வெளிநாட்டில் இருந்து மனசை தேத்திக்கிட்ட பிறகு வரலாம்னு ப்ளான் பண்ணியிருக்கேன்," என்றார் சோகமாக.
அத்தனை பலமாக இருந்திருக்கிறது 'மேலிடத்து அட்வைஸ்'!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக