புதன், 28 செப்டம்பர், 2011

இமெல்டா: பாதுகாப்பு தரப்பு கடமையை சரிவரச் செய்யவில்லை

பாதுகாப்பு தரப்பு கடமையை சரிவரச் செய்யவில்லையாம் - ஜெனீவா சென்று தன் கடமையை சரிவர செய்த இமெல்டா கூறுகிறார்!
யாழ்ப்பாணத்தில் கிறீஸ் மனிதர்களின் நடமாட்டம் தற்போது ஒரளவு குறைந்திருப்பதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமல்டா சுகுமர் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் அவர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிறீஸ் மனிதர்கள் என்று சொல்லி பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாகவும் முழுக்க முழுக்க தமிழில் உரையாடக் கூடியவர்களே அந்த செயலில் ஈடுபடுவதாகவும் அந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கும் யாழ். இராணுவத்தினரும் பொலிஸாரும் தமது கடமைகளில் இருந்து தவறியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சிவில் சமூக ஓழுங்குகளை சீர்குலைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையாகவேதான் இந்த மர்ம மனிதர்களைப் பார்பதாகவும் அண்மையில் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்தியசாலையில் சென்று பார்த்த போது அவர்கள் தங்கள் மீதான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் படி தன்னிடம் மன்றாடியதாகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார் இமெல்டா.

பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு சட்டம் தண்டிக்காவிட்டாலும் தான் தண்டிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: