வெள்ளி, 30 செப்டம்பர், 2011

மதுரை மேயர் பதவி தேர்தல் ஓடிப் போன' பாமக!

Ramadoss

மதுரை மேயர் பதவி தேர்தல்: சொல்லாமல் கொள்ளாமல் 'ஓடிப் போன' பாமக!

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த பாமக திடீரென பின்வாங்கிவிட்டது.
இந்தப் பதவிக்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.அத் போல பாமக சார்பில் மதுரை மேயர் பதவிக்கு ரமேஷ் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருந்தார்.

ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று வரை ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதன்மூலம் மதுரை மேயர் போட்டியிலிருந்து பாமக சொல்லாமல் கொள்ளாமல் விலகியுள்ளது.

ஊ....... சங்கு ஊதியபடி வந்து மனு செய்த அதிமுக பிரமுகர்:

இந் நிலையில் மதுரை மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் அதிமுகவில் சீட் கேட்டிருந்தார் அக் கட்சியைச் சேர்ந்த கைலாசம் (58). ஆனால், அவருக்கு சீட் தராமல் இப்போதைய கவுன்சிலரான முத்துசாமியின் மனைவி அங்காயிக்கு கட்சி சீட் தந்துவிட்டது.

இதனால் கடுப்பான கைலாசம் நேற்று வெள்ளை கொடியுடன், சங்கு ஊதி, துடும்பு அடித்துக் கொண்டு மனு தாக்கல் செய்ய வந்தார்.

சிறையில் இருக்கும் பாரப்பட்டி சுரேசுக்காக மனைவி வேட்பு மனு தாக்கல்:

இந் நிலையில் சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியம், 17வது வார்டு கவுன்சிலராக திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் சுரேஷ்குமார் உள்ளார். இவர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும் பதவி வகிக்கிறார். தற்போது நிலஅபகரிப்பு வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் உள்ளார்.

இந் நிலையில் அவருக்கே திமுக மீண்டும் சீட் வழங்கியுள்ளது. இதையடுத்து சுரேஷ்குமார் சார்பில், அவரது மனைவி டாக்டர் ஷாலினி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அமைச்சர்களை முற்றுகையிட்ட அதிமுகவினர்:

இந் நிலையில் திருச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோரை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக மாவட்டச் செயலாளர் மனோகரன் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே சீட் வழங்கியுள்ளதாகவும் அதை அதிமுக தலைமை ஏற்று சீட் ஒதுக்கிவிட்டு, உண்மையான தொண்டர்களை புறக்கணித்துவிட்டதாகவும் ஆவேசமாகக் கூறினர்.

கருத்துகள் இல்லை: