மனைவியிடம் இது பற்றி கேட்டார். ‘ஆமாம்...அவன் என் காதலன்தான்
யாரோ ஒரு நபர் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டுக்கு மர்மமாக வந்துபோவதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்ல, தங்கவேலு தன் மனைவியிடம் இது பற்றி கேட்டார். ‘ஆமாம்...அவன் என் காதலன்தான். பெங்களூரில் ஒன்றாக வேலைபார்த்தபோதே இருவரும் நெருக்கமாயிட்டோம்’ என்று சாதாரணமாக சொல்லியிருக்கிறார். அடுத்து, தங்கவேலுவால் உண்டான இரண்டு மாதக் கருவை அழித்துவிட்டு இப்போது இருவரும் பிரிந்து, அந்தப் பெண் மதுரைக்குப் போய்விட்டார். இது வெறும் சாம்பிள்தான். தோண்டித் துருவிப் பார்த்தால் ஐ.டி. துறையில் இதுபோல் இன்னும் பல குடும்ப கதைகள் வெளிவருகின்றன.
சொக்கலிங்கம் -ப்ரீத்தி குடும்பக் கதை வேறு மாதிரியானது.
”நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போகிறதாலே குழந்தைகளை கவனிக்க முடியலை. கையில் நிறைய காசு இருக்கு. குழந்தைகளுக்கு என்ன விருப்பமோ அதையெல் லாம் வாங்கிக் கொடுக்கிறோம். அவங்களுக்கு அப்பா, அம்மாவின் அன்பைத் தவிர வேறு எல்லாமே கிடைக்குது.
எங்களோட அப்பா, அம்மாவைக் கூட நாங்க பார்க்க முடியாது. லீவு கிடைக்காது. கிடைச்சாலும் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. வெறும் காசுக்காக ஓடுற வேலை இது’’ என தலையில் கைவைத்து ப்ரீத்தி வேதனையோடு சொல்ல, சொக்கலிங்கம் தொடர்கிறார். “இரவு, பகல்ன்னு மாறி மாறி வேலை பார்க்கறதுனாலே நாங்களே ஒருத்தரையொருத்தர் சந்திக்க முடியாத சூழ்நிலை. எங்க வாழ்க்கை ரோபோ மாதிரிதான். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசிக்கக்கூட முடிவதில்லை. அதற்கான நேரமும் இல்லை. ஆபீஸுக்குள் வந்துதான் பரஸ்பரம் போன் செஞ்சு ‘நல்லா இருக்கியா.. சாப்பிட்டியான்’னு விசாரிக்க வேண்டியிருக்கு.
பல ஆண்கள் மற்றும் பெண்கள் இப்படிப்பட்ட தங்களின் குடும்பப் பிரச்னைகளை மனக்குமுறலோடு ஆபீஸில் உடன் வேலை பார்ப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ள... பரிதாபத்தில் ஆரம்பித்து, ஆறுதலாக மாறி நாளடைவில் இதுவே கள்ளத் தொடர்புக்கு வழி வகுக்கிறது.
ஐ.டி. துறையைப் பொறுத்த வரையில் பணம்தான் இங்கே எல்லாத்தையும் தீர்மானிக்கிறது. அன்பு, பாசம், குடும்பம் எல்லாம் ஐ.டி. துறையில் காலாவதியான விஷயங்கள £யிடுச்சு’’ என மனக் குமுறலோடு முடிக்கிறார் சொக்கலிங்கம்..
சாஃப்ட்வேர்காரர்கள் குடும்பப் பிரச்னை குறித்து பிரபல மனநல ஆலோசகரான ஆனந்த் அவர்களைக் கருத்து கேட்டோம்.
“இப்போது திருமண வாழ்க்கையில் பிரச்னை என ஐ.டி. துறையினர் நிறையப் பேர் வருகிறார்கள். திருமணத்தையே அவர்கள் அவசரகதியில் செய்கிறார்கள். இந்த உறவு நீடித்திருக்கணும் என்ற எண்ணம் பலரிடம் இல்லை. முயற்சி செய்துதான் பார்ப்போமே... ஒத்து வந்தால் பார்க்கலாம். இல்லைன்னா பிரிஞ்சுடலாம் என்ற நோக்கத்தோடே இருவரும் திருமணத்திற்குள் நுழைகிறார்கள். கல்யாணம் செய்து குடும்பம் நடத்த முடியலைன்னு ஆறுமாதத்திற்குள்ளாகவே உடனடியாக டைவர்ஸ் கேட்கிறார்கள். பேங்க் அக்கவுண்ட் துவங்கி அபார்ட்மெண்ட் வாங்குவது வரை இருவரும் தனித்தனியேதான் முடிவெடுக்கிறார்கள். இன்றளவில் நிறைய பெண்கள், ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். சுய அடையாளம் வேண்டுமென நினைக்கிறார்கள். இதனால் ஈகோ பிரச்னை வெடித்து கணவனை மட்டம் தட்டும் போக்கு அதிகரிக்கிறது. ஆணும் பெண்ணும் சரியாக புரிந்துகொள்ளுதல் இன்றளவில் குறைவாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
இங்கு கவுன்சிலிங் வரும் படித்த பெண்கள் பலரும் ‘செக்ஸில் என்னை இவர் முழுமையாக திருப்தி படுத்தமாட்டேங்கிறார்...’ என் ரொம்ப ஓபனாகவே கணவரை உடன் வைத்துக் கொண்டே அவரை குற்றம் சாட்டுகிறார்கள்.
புரிந்துகொள்ளுதல் இருந்தாலே போதும், டைவர்ஸ்லாம் தேவையே இல்லை. ஆனா, இதை ஐ.டி. தம்பிகள் உணருவார்களா எனத் தெரியவில்லை” என்கிறார் உளவியல் ஆலோசகர் ஆனந்த்.
- மணிவண்ணன்
thanks kumudam+devi suva,fiji
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக