ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சர்வதேச முயற்சிகள் மீண்டும் தோல்வி – அரசாங்கம்!

இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில், சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இந்த முறை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் தோல்வியடையச் செய்ய முடிந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

18வது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்ற இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கிய அமைச்சர் மகிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமது குழுவினர், ஜனாதிபதி, வெளிநாட்டு அமைச்சர் மற்றும் ராஜதந்திர பிரதிநிதிகள் ஆகியோர் இலங்கை பெற்றுக் கொண்ட இந்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எமது செய்திப் பிரிவிற்கு இன்று அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டார்.

இதனிடையே, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவிற்கு எதிரான கனடாவினால் கொண்டுவரப்பட இருந்த சட்ட மூலமும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச சமூகம் முன் வைத்த குற்றச்சாட்டுக்கள், அவர்களது அரசியல் நோக்கத்திற்கானது என்பதனை ஜெனிவாவில் இடம்பெற்ற மாநாட்டிலும் நாம் நிரூபித்துள்ளோம் எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: