வியாழன், 20 பிப்ரவரி, 2020

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்பது தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் கிடையா!து

Santhanam Krishnan : தமிழகத்தில் சமூகநீதி என்ற சொல்லுக்கு வேறு ஒரு பெயரும் உண்டு.
ஒரு ஐடி கம்பெனியின் நிறுவனரான நண்பரின் வீடியோவில் இருந்து எடுத்த குறிப்புகளை வைத்து இப்பதிவை எழுதுகிறேன்.
தமிழகத்துடன் தொழில் துறையில் நமக்கு ஓரளவு அருகில் இருப்பது மஹாராஷ்டிரா. ஆனாலும் தமிழகத்தில் 38000 தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் 2ம் இடத்தில் இருக்கு மஹாராஷ்டிராவில் 28000 தான். எவ்வளவு பெரிய வேறுபாடு. தமிழக தொழிலாளர் எண்ணிக்கை 33லட்சம். அங்கு 28லட்சம் மட்டுமே.
அதை போல் கல்வியில் தமிழகம் 50% என்கிறார் நண்பர். (இணைப்பு முதல் பின்னூட்டத்தில்) அதாவது 12ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி சென்றவர்களை மட்டும் வைத்து எடுத்த கணக்கெடுப்பு இது. சீனாவின் சராசரியே 43% தான். இந்தியாவின் சராசரி வெறும் 25% தான். இந்தியாவை விட நாம் இரட்டிப்பு வளர்ச்சி கண்டிருக்கிறோம். இந்தியா தமிழகத்தை நெருங்க இன்னும் 25 ஆண்டுகளாவது ஆகும். அப்போது எட்ட முடியாத தூரத்தில் தமிழகம் இருக்கும் என்பது உறுதி.

மருத்துவத்திலும் தமிழகம் கண்ட வளர்ச்சி என்பது வேற லெவல் . மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்பது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அசாத்திய சாதனை. அதனால் தான் நோபல் பரிசை வென்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தமிழகத்தை பற்றி சொல்லும் போது, தமிழகத்தை ஒப்பீடு செய்ய வேண்டுமானால் பிற மாநிலங்களுடன் செய்ய கூடாது. நார்வே பின்லாந்து போன்ற வளர்ந்த நாடுகளுடன் தமிழகத்தை ஒப்பீடு செய்வது தான் சரி என்கிறார்.
பெரியார் அண்ணா கலைஞர் என்ற மூன்று மாமனிதர்களும் இங்கு செய்து விட்டு போன வேலை என்ன என்பது புரிகிறதா? இப்போது பதிவின் முதல் வரியை மீண்டும் படியுங்கள்.
தமிழகத்தில் சமூகநீதி என்ற சொல்லுக்கு வேறு ஒரு பெயரும் உண்டு. அதன் பெயர் #திராவிடம்.
Shared

கருத்துகள் இல்லை: