சமீரத்மாஜ் மிஷ்ரா- பிபிசி ஹிந்தி :
உத்தர பிரதேச சோனபத்ர மாவட்டத்தில்
3000 டன்கள் தங்கம் உள்ள சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என செய்திகள் பரவிய
நிலையில், அதனை மறுத்துள்ளது இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம்.
கனிம வளத்துறை
உத்தர
பிரதேசத்தின் சோன்பத்ர மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான டன் தங்கம் நிலத்தில்
புதைந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் கனிம வளத்துறை
இதை உறுதி செய்ததுடன், விரைவில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்தது
இந்தியாவின் புவியியல் ஆய்வுக் குழு சோன்பத்ரில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. சோன்பத்ரில் தங்கம் புதைந்து கிடப்பது எட்டு ஆண்டுகளுக்கு முன்பே புவியியல் ஆய்வு குழுவால் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலத்தில் உள்ள தங்கத்தைத் தோண்டி எடுக்கும் நோக்கத்துடன் இணையம் மூலம் நிலத்தை ஏலம் விட்டு விற்பனை செய்யவும் உத்தர பிரதேச அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதே சோன்பத்ர மாவட்டத்தில் யுரேனியம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் மத்திய அரசாங்க குழுக்கள் சில ஆய்வு நடத்தி வருகின்றனர் என சுரங்க துறை அதிகாரி கே கே ராய் கூறினார்.
ஆனால், இப்படியான சூழலில், இதனை மறுத்துள்ளது இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம்
>சோன்பத்ர மலைப்பகுதியில் மூவாயிரம் டன் தங்கம் புதைந்திருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு குழு கூறுகிறது. மேலும் 600 கிலோ தங்கம் ஹார்டி பகுதியில் புதைந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி புல்வார் மற்றும் சலையாதி உள்ளிட்ட பகுதிகளில் இரும்பு தாதுகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தாதுக்களிலும் தங்கம் கலந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2005ம் ஆண்டு சோன்பத்ர மாவட்டத்தில் தங்கம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஆய்வுகள் தொடங்கியது. 2012ம் ஆண்டு தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் சுரங்கத்தை தோண்டுவதற்கான எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் தற்போது நிலத்தை ஏலம் விடுவதற்காக 7 பேர் கொண்ட குழுவை உத்தர பிரதேச அரசாங்கம் அமைத்துள்ளது.
பெரிய அளவில் கனிம வளங்கள் கிடைக்கும் என்பதால் சோன்பத்ர மாவட்டத்தில் ஹெலிகாப்டர் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நிலத்தில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் கருவிகளை ஹெலிகாப்டரின் கீழ் பகுதியில் கட்டி தொங்கவிட்டு, நிலத்திலிருந்து 100 மீட்டர் உயரத்திலிருந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
108 ஏக்கர் நிலப்பரப்பில் தங்கம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக சோன்பத்ர மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூர் பகுதியிலும், மத்தியப் பிரதேசத்தின் சிங்ரவுலி மாவட்டத்திலும் ஜார்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் பயன்படுத்தி கனிம வளங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து உள்ளூர் செய்தியாளர் தியான் பிரகாஷ் சதுர்வேதி கூறுகையில், ''சோன்பத்ர மாவட்டத்தை ஆட்சி செய்த மன்னர் பரியர் ஷாவின் கோட்டை இங்கு உள்ளது. கோட்டைக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பல மன்னரின் கோட்டைக்கு இரு புறமும் உள்ள சோன் பஹாடி, ஷிவா பஹாடி மலைப்பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. இவரின் காலகட்டத்தில் விலை மதிப்புமிக்க பல உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.'' என்றார். >

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக