வியாழன், 20 பிப்ரவரி, 2020

இந்தியன் 2 .. விதிமீறல்தான் விபத்துக்கு காரணம் .. அளவுக்கு அதிகமான சுமையை கிரேனில் ஏற்றிய படக்குழு

tamil.filmibeat.com : சென்னை: நேற்று இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த கிரேன்
விபத்துக்கு என்ன காரணம் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. நேற்று அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். நேற்று காயம் அடைந்த எல்லோருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள்.
இந்த விபத்துக்கு சின்ன விதிமீறல்தான் காரணம் என்று கூறுகிறார்கள். நேற்று படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்டு இருந்த லைட் கீழே விழுந்துதான், இந்த விபத்து ஏற்பட்டது. பொதுவாக கிரேன்களில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் எடை வைக்க முடியும். ஒரு அளவிற்குத்தான் தாங்க முடியும்.அதற்கு மேல் எடை போனால், கிரேன் விழுந்துவிடும். இந்த நிலையில் நேற்று அதிக அளவில் கிரேனில் லைட் கட்டியிருக்கிறார்கள். இரவில் எடுக்கப்பட்ட சூட். மிக முக்கியமான காட்சி. இதனால் அதிக ஒளி வேண்டும் என்று கூறி நிறைய லைட்டுகளை கட்டி இருக்கிறார்கள்.


கிரேன்களை இயக்கியவர் எச்சரித்தும் கூட அதிக லைட்களை கட்டி உள்ளனர். இந்த வகை லைட்டுகள் அதிக எடை கொண்டது ஆகும். இந்த நிலையில் நேற்று அதிக அளவில் கிரேனில் லைட் கட்டியிருக்கிறார்கள். இரவில் எடுக்கப்பட்ட சூட். மிக முக்கியமான காட்சி. இதனால் அதிக ஒளி வேண்டும் என்று கூறி நிறைய லைட்டுகளை கட்டி இருக்கிறார்கள். கிரேன்களை இயக்கியவர் எச்சரித்தும் கூட அதிக லைட்களை கட்டி உள்ளனர். இந்த வகை லைட்டுகள் அதிக எடை கொண்டது ஆகும்

படக்குழு மீண்டும் மீண்டும் கேட்டு இப்படி அதிக லைட்டுகளை வைத்துள்ளது. இந்த அதிக எடை கொண்ட லைட்டுகளால் நேற்று கிரேன் லேசாக சரிந்துள்ளது. பட பிடிப்பு தொடங்கும் போதே லைட்டுகள் சரிந்த வண்ணம் இருந்துள்ளது. அதன்பின்தான் கிரேன் மொத்தமாக விழுந்து இருக்கிறது. ஒரு பக்கமாக சரிந்து இருந்த கிரேன் அப்படியே மாலை எடை தாங்காமல் கீழே விழுந்துள்ளது

இந்த விதிமீறல்தான் விபத்துக்கு காரணம் என்கிறார்கள். கோலிவுட்டில் மட்டுமின்றி இந்தியா முழுக்க இப்படி செய்கிறார்கள். படம் நன்றாக வர வேண்டும். இரவு நேர காட்சிகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள். இதை கட்டுப்படுத்த வேண்டும். சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்று அனைத்து விதமான படங்களிலும் இப்படி தவறு நடக்கிறது என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: