சனி, 22 பிப்ரவரி, 2020

சீமானும், அவர் கட்சியும் மிக மிக பயங்கரமான கட்சி”- நடிகை விஜயலட்சுமி ஆவேசம்


நக்கீரன் :  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை சித்திரவதை செய்ததாக நடிகை விஜயலட்சுமி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஃபேஸ்புக்கில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பினர். சீமானுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டை சாதாரண ஒன்று சீமான் முடித்துக்கொண்டார். ஆனால், சீமானின் தம்பிகளும், கட்சி நிர்வாகிகளும் சமூக வலைதளங்களில் நடிகை விஜயலட்சுமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி காளியம்மாள் ஒரு மேடையில் நடிகை விஜயலட்சுமியை கடுமையாக விமர்சித்தார். இதனை அடுத்து மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு சீமானுக்கு தனக்கும் என்ன நடந்தது? ஏன் அந்த வீடியோவை வெளியிட்டேன்? என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.
அதில்,  “இந்த போராட்டம் எனக்கும் சீமானுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். இப்போது கூட நான் சொல்கிறேன் என் பின்னால் எந்த கட்சியும், அரசியல் தலைவர்களும் இல்லை. எத்தனையோ கட்சி இருக்கிறது. கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். அதிமுகவில் ஜெயலலிதா அம்மா இருந்தவரை பெண்களுக்கு எந்தவித தொந்தரவும் யாரும் கொடுக்க மாட்டார்கள். அதேபோலதான் திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளிலும் யாரும் உங்களுக்கு உயிர் பயம் தரவே மாட்டார்கள்.


சீமானுடைய வழக்கறிஞர் இதற்கு முன்பு பேசியபோது, ‘அவங்கள எல்லாரையும் அன்பா பார்க்க சொல்லுங்க’ என்று பேசினார். சீமானை முதலில் மேடைகளில் பேசும்போது அன்பாக வேறு யாரையும் தாக்காமல் பேச சொல்லுங்கள்.

நான் பார்த்த வரையில் சீமானும், சீமானுடைய கட்சியும் மிக மிக பயங்கரமான ஒரு கட்சி. 2008ஆம் ஆண்டு நான் முதன் முதலில் போலீஸிடம் புகாரளித்தபோது, சீக்கிரம் கமிஷனர் அலுவலகம் சென்று உனக்கு போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய் என்றார் என்னுடைய நண்பர்.  மதுரையில் எத்தனையோ நாட்கள் என்னை ஒரு அரையில் அடைத்து வைத்திருந்தனர். அதுமாதிரியான சித்திரவதைகள் அனுபவத்திருக்கிறேன். என்னை கடவுள் ஏன் இன்னும் உயிருடன் வைத்திருக்கிறார் என்று பார்த்தால், நான் பட்டதுபோல வேறு எந்த பெண்ணும் படாமல் இருக்க வேண்டும் என்றுதான் நான் இதை செய்கிறேன். நான் யாரிடமும் காசு வாங்கிக்கொண்டு இதை செய்யவில்லை. காளியம்மாள் பேசிய தொனியை பாருங்கள். யார் அவருக்கு இதையெல்லாம் சொல்லிக்கொடுப்பார் சீமான்தானே? அந்த அச்சுறுத்தலை கொடு என்று சொல்வது சீமான்தானே?” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: