வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

பா.ரஞ்சித்... சமுக வலையில் விவாதம் .. கபிலன் காமராஜ் : பார்வையில்

கபிலன் காமராஜ் : அண்ணல் அம்பேத்கரும் பெரியாரும் அவர்கள் வாழும்
காலத்தில் ஒன்றாக இணைந்து தானே செயலாற்றினார்கள் பின்ன ஏன் பா.ரஞ்சித் பெரியாரை அண்ணலுக்கு எதிர்புறம் நிறுத்துகிறார் என்ற கேள்விக்கு பதிலில்லை.
சரி இதுவரை பெரியாரின் சமூக நீதி போராட்டம் பற்றி ரஞ்சித் செய்த ட்வீட் ஏதாவது காட்டுங்க என்றால் அதுக்கும் பதிலில்லை.
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு அவர் மகனே கண்டித்து பதிவிட்டார். திராவிட இயக்கத்தவர் எல்லோரும் கண்டித்து பதிவிட்டார்கள். இப்போ பா.ரஞ்சித்தும் கண்டித்து பதிவிடுகிறார்.
ஒரு வேறுபாடு மட்டும் தான், திராவிட இயக்கத்தவர் ஆர்.எஸ்.பாரதியை மட்டும் கண்டிக்கவில்லை, ரஜினி, ரஜினியின் மைத்துனர் Y.G.மகேந்திரன், ரஜினியின் மைத்துனர் மகள் Y.G.மதுவந்தி என பாரபட்சமில்லாமல் எல்லோரையும் கண்டித்தனர்.
பா.ரஞ்சித் ரஜினியையோ அவரை சார்ந்தவர்களையோ கண்டித்து பதிவிட்டு பார்த்ததேயில்லை.
அம்பேக்கர், வள்ளுவருக்கெல்லாம் காவிச் சாயம் பூசி இந்துத்துவம் விழுங்க ஆரம்பித்து பல காலம் ஆகிறது. அதை எதிர்த்து நீலச் சட்டை பேரணியில் ரஞ்சித் கலந்து கொள்ளவில்லை. ஏன் என கேட்டால், ரஞ்சித் தனித்து இயங்குவார் என்கின்றனர். அம்பேத்கர் கூட்டாகத்தான் இயங்கினார். பெரியார் கூட்டாகத்தான் இயங்கினார். நீங்க அவர்களை விட பெரிய மனிதர், தனியாகவே இயங்குங்கள்.

அப்புறம் ஏதோ அம்பேத்கர் அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல ஒரு எண்ணம் வேறு. மற்ற தேசிய தலைவர்களை போல அம்பேத்கரும் இந்திய மக்கள் அனைவர்க்கும் சொந்தம். நீங்கள் அம்பேக்கரின் எந்த புத்தகத்தை படித்து அவரின் கருத்தை அறிந்தீர்களோ அதே புத்தகத்தை தான் நாங்களும் படித்து அறிந்துள்ளோம்.
போங்க, போய் ரஞ்சித்கிட்ட அவரோட Selective Mutism நிறுத்திட்டு, ரஜினியை எதிர்த்து கேள்விகேட்க சொல்லுங்க. அப்படியே இந்த CAA2019, கஷ்மீர் உரிமைகள் நீக்கம், மதியஉணவு திட்டத்தில் இந்துத்துவம் புகுவது என பல பிரச்சனைகளை பற்றியும் ட்வீட் செய்யச் சொல்லுங்க.
பி.கு.
மோடியை விமர்சித்தால் தேசத்துரோகி, சீமானை விமர்ச்சித்தால் வந்தேறி, ரஞ்சித்தை விமர்சித்தால் சாதிவெறியன் ... நல்லா பட்டம் கொடுக்குறீங்க
அப்புறம் இந்த படம் புலம் பெயர்ந்த நாட்டில் நாங்கள் துவங்கிய நூலகத்தில் குழந்தைகளுக்கு அம்பேத்கரை கொண்டு சேர்க்க தேடி வாங்கிய புத்தகங்கள். இதுபோல வேறேதும் புத்தகமிருந்தால் தெரிவிக்கவும்.

கருத்துகள் இல்லை: