செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

பிப்ரவரி 18, 1992 மகாமகம் உயிரிழந்த 48 மனிதர்கள் .. ஜெயா சசி குருர ஜலக்கிரீடை Flashback விபரங்கள

ஜெயாவும் சசிக்யும் ஒருவர் மாறி ஒருவர் தலையில் தண்ணீரை ஊற்றி கொண்டிருதனர் . கொஞ்சம் தள்ளி மக்கள் உயிரை விட்டுக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியை வர்ணித்தவர்களின் வர்ணனை ஒலியில் மக்களின் மரண ஓலம் ஜெயலலிதா-சசிகலாவின் காதுகளில் விழவில்லை. போலீஸ் தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 என்று சொல்லப்பட்டது
Mahalaxm : பிப்ரவரி 18, 1992
வரலாற்றில் இன்று.
கும்பகோணம் மகாமகத்தில்,48
பக்தர்கள் பலர் பலியான தினம் இன்று
1992ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர்
ஜெயலலிதாவுக்கு அவரின் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்து இருந்தார்கள்... “நீங்கள் மகாமக குளத்தில் குளித்தீர்கள் என்றால், உங்களது எதிர்காலம் சுபிட்சமாக இருக்கும்” என்று.
பிப்ரவரி 18, 1992. ஜெயலலிதா கும்பகோணம் வருகிறார். அந்த நகரமே அல்லோலப்பட்டது. எப்போதுமே மகாமகம் என்றால், அந்த சிறு நகரத்தில் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள். இதில் முதல்வரும் வருகிறார் என்றால் கேட்க வேண்டுமா என்ன...? கட்சிக்காரர்கள், பக்தர்கள், காவலர்கள் என அந்த ஊரே அல்லோலப்பட்டது. அவருக்காக மேற்குக்கரையில் குண்டு துளைக்காத கண்ணாடியிலான குளியல் அறை தயாராக இருந்தது. அங்கு ஜெயலலிதா அமர, சசிகலா தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்க... இன்னொரு பக்கம் கூட்டம் முந்தியடித்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வடக்குக்கரையில் இருந்த தர்மசாலாவின் தடுப்புச் சுவர் உடைந்து விழுந்தது.
சரியாக அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவும் நீராடிவிட்டுக் கிளம்பினார். அவருடன் பெரும் கூட்டம் கிளம்பவே நெரிசல் மேலும் மேலும் அதிகமாகியது... அந்த நெரிசலில் சிக்கி மிதிபட்டு 48 பக்தர்கள் இறந்தனர் அவர்களை தெய்வங்களும் காப்பாற்றவில்லை. அ.தி.மு. க அரசும் காப்பாற்றவில்லை....


இதை கிண்டல் பண்ணியதால்‌ தான் ஆயா மனசுல வச்சி இருந்து சந்தர்ப்பம் கிடைத்தவுடன் காஞ்சி ஜெயேந்திர னை கைது பண்ணியது...

விகடன் : கும்பகோணம் மகாமகம் தொடக்கம்.. 1992 பிப்ரவரி 18-ம் தேதி கும்பகோணம் மகாமகம். அதற்கான நாள் நெருங்க நெருங்க பலவிதமான சர்ச்சைகளும், இனம் புரியாத அச்சமும் தமிழகத்தில் பரவிக் கொண்டிருந்தன. கும்பகோணம் மகாமகக் குளத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா நீராடப் போகிறார் என்ற செய்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது. கும்பகோணம் முழுவதும் ஜெயலலிதாவின் வானுரய கட்-அவுட்களால் நிறைந்து போனது. அ.தி.மு.க-வினர் தீவிர வசூல் வேட்டையில் இறங்கினர். 17-ம் தேதியே போலீஸ் கெடுபிடிகள் தொடங்கின. ஜெயலலிதா நீராடுவதற்காக பல லட்சங்களைக் கொட்டி குளியலறை அமைக்கப்பட்டது. “முதல்வர் வந்து நீராடிவிட்டுப் போகும்வரை பக்தர்கள் யாரும் குளத்தில் இறங்கக்கூடாது” என்று போலீஸ் கட்டுப்பாடு விதித்தது. திகிலடைந்தவர்கள் மகாமகத்துக்கு முதல் நாளே நீராடிவிட்டுக் கிளம்பினர். மகாமகத்தன்று காலை 8.30 மணிக்கு குளத்தருகே பக்தர்கள் மெதுவாகக் கூடத் தொடங்கினர். போலீஸ் அவர்களைக் கட்டுப்படுத்தியது. அந்தக் கட்டுப்பாடு எல்லாம், 9.30 மணி வரை மட்டுமே. அதன்பிறகு, குளத்தில் நின்ற மக்கள் கூட்டம் வேகமாகக் கூடிக் கொண்டே போனது. போலீஸால் அதைக் தடுக்க முடியவில்லை. ஜெயலலிதா நீராடுவதைப் பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே குளத்தருகே வந்த தேவாராம் ஐ.ஜி. பைனாகுலரில், மக்கள் நெருக்கியடித்து அவதிப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் கையை விட்டு எல்லாம் போய் இருந்தது. அவரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் சூழல் அப்போது. சரியாக காலை 11.32 மணிக்கு ஜெயலலிதா நீராடுவதற்காக பிரத்யோகமாக அமைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு வந்தார். அங்கிருந்து கூட்டத்தைப் பார்த்துக் கையசைத்தார்.
கும்பகோணம் மகாமகம் முடிவு...
ஜெயலலிதா கை அசைத்ததை அவருக்கு நேர் எதிரில், வடக்கு வீதிப்பக்கம் இருந்தவர்களால் பார்க்க முடியவில்லை. இடையில் இருந்த ஒரு கோயில் அவர்களை மறைத்தது. எனவே, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் முன்னுக்கு வந்து பாங்கூர் தர்மசாலா கட்டடத்தின் வெளிப்புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச் சுவர் மீது ஏற முயன்றனர். அதைத் தொடர்ந்து இரும்பு கிரில் கட்டைச் சுவரோடு சாய்ந்தது. அதில் நசுங்கி பலர் இறந்தனர். அந்தத் துயரம் ஏற்படுத்திய ஓலம், பதற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெறித்து ஓடத் தொடங்கினர். அதே நேரத்தில் குளத்துக்குள் இருந்தவர்கள் வெளியில் ஏறி ஓடத் தொடங்கினர். இதனால், நேரேதிரில் பதற்றத்தோடு ஓடிய கும்பல், கூட்டம் ஒன்றும் புரியாமல், ஒன்றோடு ஒன்று மோதி, கீழே விழுந்து, நசுங்கி, மூச்சுத் திணறி உயிரைவிட்டது. அதற்கு நூறு அடி தூரத்துக்குள் சசிகலா ஒரு குடத்தில் மகாமகக் குளத்தின் தண்ணீரை அள்ளி அள்ளி ஜெயலலிதாவின் தலையில் ஊற்றினார். அதன்பிறகு ஜெயலலிதா அதேபோல் சசிகலாவின் தலையில் தண்ணீரை ஊற்றினார். கொஞ்சம் தள்ளி மக்கள் உயிரை விட்டுக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியை வர்ணித்தவர்களின் வர்ணனை ஒலியில் மக்களின் மரண ஓலம் ஜெயலலிதா-சசிகலாவின் காதுகளில் விழவில்லை. போலீஸ் தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 என்று சொல்லப்பட்டது. ஜெயலலிதாவும் சசிகலாவும் கும்பகோணத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் இரண்டறை மணிக்கு மேல்தான் கிளம்பினார்கள். ஆனால், இறந்த உடல்கள் வைக்கப்பட்டு இருந்த குடந்தை மருத்துவமனைப் பக்கமோ...  காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்ற அவசர சிகிச்சைப் பிரிவையோ திரும்பிக்கூட பார்க்கவில்லை. ‘ரெட் கிராஸ்’ அமைப்பின் ஆம்புலன்ஸ்கள் மட்டும் இறந்தவர்களையும் காயம்பட்டவர்களையும் தேடி அலறிக் கொண்டிருந்தது. 
தமிழகம் முழுவதும் கடும் சர்ச்சைகளை எழுப்பிய இந்த விவகாரத்துக்குப் பின்னால், சசிகலாவின் செல்வாக்கு கார்டனுக்குள் இன்னும் கூடியது. அதன்பிறகு அவர் தினம்தோறும் நமது எம்.ஜி.ஆர் அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தார். அதோடு எப்போதும் சசிகலா-நடராசனுக்கு ஆகாத ஆர்.எம்.வீ-யின் அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: