வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

சமுக வலையில் ஜாதி பதிவுகள் .. Karthikeyan Fastura பார்வையில்

Karthikeyan Fastura : எனக்கு சங்கிகள் பிரச்சனை இல்லை. சீமான் தம்பிகள் கூட பிரச்சனை இல்லை. அவர்கள் எதிர் சிந்தனை கொண்டவர்கள். நாளையே திருந்தக்கூடும். பாபர் மசூதியை இடித்தவர் கூட திருந்தி மனம் வருந்தி நிறைய பள்ளிவாசல்களை கட்டி கொடுத்திருக்கிறார்
பெரியாரையும், அம்பேத்கரையும் புகழ்ந்து கொண்டே மறுபக்கம் சாதிய சிந்தனையில் இருந்து முழுதாக வெளிவர முடியாமல் அவதூறுகளை பரப்புபவர்களை கண்டால்தான் மிகவும் எரிச்சலாக இருக்கிறது. நம்மைச் சுற்றிய முகநூல் வட்டத்திலேயே நிறைய ஆர்.எஸ்.பாரதிகள் இருக்கிறார்கள்.
கபிலன் காமராஜ் என்ற பதிவர் ரஞ்சித்தின் நேற்றைய டிவிட்டுகளை போட்டு ரஞ்சித் பெரியாரை அவமதிக்கிறார் என்று பக்கம் பக்கமாக எழுதுகிறார். இத்தனைக்கும் அந்த ட்வீட்டில் ரஞ்சித் பெரியாரை இரண்டு முறை குறிப்பிட்டு அவரது சிந்தனையை மறந்துவிடாதீர்கள் என்று வலியுறுத்திக் கூறியும் அதை கணக்கில் எடுக்காமல் ரஞ்சித் திராவிட இயக்க வரலாற்றோடு அயோத்திதாசர் இரட்டைமலை சீனிவாசன், எம் சி ராஜா உள்ளிட்ட பெரியவர்களை குறிப்பிட்டதற்காக பெரியாரை மதிக்கவில்லை என்று கபிலன் ரஞ்சித் மீது அவதூறை முன்வைக்கிறார்.

ரஞ்சித் இதுவரை பெரியாரை எந்த டிவிட்டில் குறிப்பிட்டிருக்கிறார் என்று புரியாமல் திரும்ப திரும்ப வரட்டுவாதம் செய்கிறார். ரஞ்சித் காலா படத்தில் பெரியாரை குறிப்பிட்டுள்ளார், தனது நீலம் புரொடக்ஷன் மூலமாக தனியாக ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார் என்று கூறியும் காதிலேயே வாங்காமல் ரஞ்சித் பெரியாரை அவமதிக்கிறார் என்று தொடர்ந்து எழுதி வருகிறார். பெரியாரை அவமதித்திருந்தால் நான் உங்களை ஆதரித்து இருப்பேன் உங்களிடம் சண்டை போட மாட்டேன் என்று சொல்லியும் மனுஷனுக்கு புரியவில்லை. எரிச்சல் ஆகிவிட்டது.
இவரை போலவே பலரும் ஒருபக்கம் முற்போக்கு பேசிக்கொண்டு சாதியை எதிர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு பெரியார் பேரன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு மறுபக்கம் கிடைக்கும் நேரமெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களை, அதிலிருந்து புறப்பட்ட தமிழ் ஆளுமைகளை மட்டம் தட்டி அதில் ஆனந்தம் கொள்கிறார்கள். என்னவிதமான சைக்கோ மனநிலை இது.
முன்பு நரேன் ராஜகோபால் என்பவர் பொருளாதாரத்தைப் பற்றி அதில் சங்கிகள் வரும் சொதப்பல்களைப் பற்றி நன்றாக எழுதுவார். மிகச்சரியாக ரஞ்சித் படங்களை அல்லது அவரது கருத்துக்களை வஞ்சகத்துடன் மட்டம் தட்டி பேசுவார்.
ரஞ்சித் மீது விமர்சனங்கள் வைக்கக் கூடாது என்று நான் கூறவில்லை. எனக்கே அவரிடம் விமர்சனங்கள் இருக்கிறது. கபாலி காலா போன்ற படங்களில் நடித்த பிறகும் சங்கிதனம் குறையாமல் பேசிவரும் ரஜினிகாந்த் மீது ரஞ்சித் தனது விமர்சனத்தை வைக்காமல் அமைதியாக கடந்திருக்கிறார். அது ரஜினி மீதான நன்றி உணர்வாக இருக்கலாம். அரசியல் நிலைப்பாட்டில் நன்றியை முன்வைத்து அமைதி காப்பதும் தவறுதான்.
ஸ்ரீதர் சுப்ரமணியன் என்ற பதிவர் பிஜேபி கட்சியின் முட்டாள்தனங்களை ஒவ்வொரு கட்டத்திலும் தெளிவாக விளக்கி எழுதுவார். ஆனால் அவ்வப்போது பார்ப்பனராக மாறி பார்ப்பனர்களுக்கு ஆதரவாக எழுதுவார். சமீபத்தில் அண்ணாரின் கட்டுரை சவர்கார் சிறையில் எப்படி வாடினார் என்பதும், அப்படி இருக்கும் ஒருவர் மன்னிப்பு கடிதம் எழுதியதில் என்ன தவறு என்று நீண்டதொரு பதிவை எழுதினார். அதற்கு மாற்றுக் கருத்து பலரும் முன்வைத்தபோது அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக கடந்தார். பல சமயங்களில் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் கூறுவதில்லை. ஆதரிக்கும் கமென்ட்களுக்கு மட்டும் பதில் வரும்.
இவர்கள் அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான குணம் தனது தவறுகளை அவர்கள் உணர்வதே இல்லை. அதை மாற்றிக் கொண்டு சிந்தனையை வளர்த்துக் கொள்வதும் இல்லை.
6 வருடங்களுக்கு முன்பு எழுதிய என் பழைய பதிவுகள் சிலவற்றை பார்க்கும்போது நான் கூட சொதப்பி இருக்கிறேன். அரைவேக்காட்டு புரிதலுடன் எழுதி இருக்கிறேன். ஆனால் காலம் செல்லச் செல்ல புரிதல் ஏற்பட எனது பழைய கருத்துக்களை மாற்றி சரியான நேர்மையான நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொள்கிறேன். என் தவறுகளை திருத்திக் கொள்ள நான் என்றும் தயங்கியதில்லை. அதுதான் என்னை அறிவிலும் அறத்திலும் முன்னேற செய்கிறது
இந்த அரைவேக்காட்டு மனிதர்களிடம் விலகியும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று இந்த பதிவை எழுதுகிறேன். கபிலன் காமராஜை நட்பு நீக்கம் செய்து என்னை காப்பாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை

கருத்துகள் இல்லை: