ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடகா கம்ப்பாலா வீரர் சீனிவாசா கவுடா !


மாலைமலர் : புதுடெல்லி: கர்நாடகாவில் புகழ்பெற்ற பாரம்பரிய விளையாட்டான கம்பாளாவில் வேகமாக ஓடும் எருமை மாடுகளுடன், அதனை இயக்கும் பயிற்சி வீரர் ஒருவர் உடன் ஓடுவார்.
இந்த போட்டியில் 2013-ம் ஆண்டு முதல் மங்களூருவின் மிஜர் அஸ்வத்பூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாச கவுடா கலந்து கொண்டு வருகிறார். இதற்கிடையே, கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற கம்பாளா போட்டியில் மொத்த தூரமான 142.5 மீ., 13.62 வினாடிகளில் கடந்தார். 100 மீ., தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
2017-ல் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவை சேர்ந்த  உசைன் போல்ட்டின் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்தார். இதுவே இதுவரை உலக சாதனையாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், கம்பாளா வீரர் சீனிவாச கவுடா 9.55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கம்பாளா வீரர் சீனிவாச கவுடா போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த வீரரை மத்திய விளையாட்டு அமைச்சகம் தொடர்பு கொண்டுள்ளது. அவர் திங்களன்று இந்திய விளையாட்டு ஆணையம் வந்தடைவார். அவருக்கு தலைசிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என பதிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: