வியாழன், 20 பிப்ரவரி, 2020

டி.எம். கிருஷ்ணா அதிரடி : கர்நாடக ஹிந்துஸ்தானி எல்லாவற்றிலும் ஜாதி இருக்கு

.

இப்ப கலையுலகத்திலேயே மாற்றங்கள் நடக்கிறது , ஆனால் மிகவும் மெதுவாக நடக்கிறது .
டிசெம்பர் சீசன்ல விசேஷமாக மாற்றங்கள் வந்திருக்கிறதா என்றால் ,
என் கண்பார்வையில் பெரிதாக ஒன்றும் இல்லை.
நான் வந்து இன்னும் கர்நாட்டக இசை உலகத்தில் இருக்கிற ஆளுதான்.
அதில இருக்கிற பெனிபிட்ஸ்சும் இன்னும் வருகிறது.
அதை நான் சொல்ல விரும்புறேன் .
இப்படி நான் பேசுறதை கேட்டுவிட்டு என் கர்நாடிக் கச்சேரிக்கு வர்றவங்க வராம இருக்க போறாங்கள ?  இல்லையே!
அந்த பெனிபிட் எனக்கு இன்னும் வருதில்லை ?
நெறைய பேர் நினைக்கலாம் இது நல்ல பிராடு ஆக இருக்கு .
இந்த ஆளு வந்து இப்படி எல்லாம் பேசுறான் .
உள்ள இருக்கிற பெனிபிட்டும் எடுத்துக்கிறேன் .
வெளியே இருக்கிற பெனிபிட்டும் எடுத்துக்கிறான் .
அதுதான் நிஜம் .. அதுதான் ஜாதி . அதுதான் என்னோட ஜாதி .
அதுதான் என்னோட ஜாதில எனக்கு லைவ் பூரா இருக்கிற பெனிபிட் .
நான் ஜாதி இல்லைன்னு எவ்வளவு கத்தினாலும் என்னோட ஜாதியோட பெனிபிட் எனக்கு இருக்கு .
மைய்லாப்பூர்ல இருக்கிறவங்க இன்னும் என்பாட்டை கேப்பாங்க .
மாற்றங்கள் வருமா ? வரலாம் . .நான் இருக்கிறேனோ இல்லையோ மாற்றங்கள் வந்தால் நல்லது.

கர்நாடக உலகத்தில ஜாதி இருக்கா?
இருக்கு ,, ஹிந்துஸ்தானியிலும் இருக்கு . எல்லா இடத்திலும் ஜாதி இருக்......


BBC : மிருதங்கம் வாசிப்பவர்களில் 99 சதவீதம் பேர் பிராமணர்கள். மிருதங்கம் செய்பவர்களில் 99 சதவீதம் பேர் தலித்துகள் என்கிறார்
Sebastian & Sons என்ற பெயரில் மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ள கர்நாடக இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணா. மிருதங்கம் செய்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் இடையிலான சிக்கலான உறவு, கர்நாடக இசை உலகில் நிலவும் ஜாதிப் பாகுபாடு ஆகியவை குறித்தெல்லாம் பிபிசியிடம் பேசினார் டி.எம். கிருஷ்ணா. "மிருதங்கம் செய்ய பசுவின் தோல் பயன்படுத்தப்படுகிறதென்பது மிருதங்கம் வாசிப்பவர்கள் எல்லோருக்குமே தெரியும். நாங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பார்கள்," என்கிறார் அவர்
.

கருத்துகள் இல்லை: