வெப்துனியா : சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் நடந்த கொடுமை
சென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையில்
செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த உதவி பேராசிரியர் ஒருவர் கைது
செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
;சென்னை ஐஐடியில் விண்வெளி பொறியியல் துறை ஆய்வுகூடத்தில் பெண்கள் கழிவறை ஒன்று உள்ளது.
இதில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் சென்றபோது, அதே துறையைச் சேர்ந்த உதவிப்பேராசிரியரான சுபம் பானர்ஜி என்பவர் கழிவறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
பெண்கள் கழிவறையில் இவருக்கு என்ன வேலை என சந்தேகம் அடைந்த அந்த மாணவி கழிவறைக்குள் சென்று உற்று கவனித்தபோது தண்ணீர் குழாய்களுக்கு இடையே இருந்த ஒரு கேப்பில் செல்போன் ஒன்றின் கேமிரா ஆன் செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
;இதனையடுத்து அந்த கழிவறையில் மறைந்து நின்று கொண்டிருந்த உதவிப்பேராசிரியர் சுபம் பானர்ஜியிடம் அந்த மாணவி இதுகுறித்து விசாரித்த போது, அந்த செல்போன் அவருடையது என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் மீது அந்த மாணவி போலீஸில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்ததில் இதற்கு முன்னரும் பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து அவர் வீடியோ எடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அந்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக