செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

கம்பாலா 9.51 வினாடியில் 100மீ - ஸ்ரீனிவாச கௌடா சாதனையை விஞ்சிய நிஷாந்த் ஷெட்டி

ஜல்லிகட்டு போராட்டம் வெற்றி பெற்று சட்ட அங்கீகாரத்தை பெற்றதன் பலனை தற்போது கர்நாடக தெலுங்கான ஆந்திரா போன்ற மானிலங்கள அனுபவிக்கின்றன . கம்பாலா பந்தயத்தில் தற்போது அடுத்தது உலக சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள் சீனிவாச ரெட்டியும் நிஷாந்த் ரெட்டியும் ..இதுவும் ஜல்லிகட்டு போராளிகளின் வெற்றிக்கு சூட்டப்பட்ட மற்றொரு மகுடமாகும்

tamil.indianexpress.com : அவர் முதல் 100 மீட்டர்களை 9.51 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார். இது ஸ்ரீனிவாச கௌடாவின் 9.55 நொடிகள் எனும் நேரத்தைவிட குறைவு என்று பி.டி.ஐ செய்தி...
ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட் உடன் ஒப்பிடப்பட்ட கம்பாலா வீரர் ஸ்ரீனிவாச கௌவுடாவின் வேகத்தையே மிஞ்சியுள்ளார் நிஷாந்த் ஷெட்டி எனும் கம்பாலா எருமைப் பந்தைய வீரர்.
பிப்ரவரி 1 கர்நாடகாவில் நடந்த கம்பாலா எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.62 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சென்ற ஞாயிறன்று பஜகோலி ஜோகிபேட்டு எனும் ஊரைச் சேர்ந்த நிஷாந்த் ஷெட்டி என்பவர் 143 மீட்டர் தூரத்தை தனது அணியின் எருமைகளை விரட்டிக்கொண்டு 13.68 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார் என்று கம்பாலா எருமை பந்தைய ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. வென்னூரில் நடைபெற்ற சூர்ய – சந்திர கம்பாலா போட்டியில் இந்த சாதனையை படைத்ததாக கூறப்பட்டுள்ளது. அதன்படி கணக்கிட்டால் அவர் முதல் 100 மீட்டர்களை 9.51 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார். இது ஸ்ரீனிவாச கௌடாவின் 9.55 நொடிகள் எனும் நேரத்தைவிட குறைவு என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஸ்ரீநிவாஸா கௌடாவை  நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அப்போது வழங்கப்பட்டது.

ஸ்ரீனிவாச கவுடாவை நேரில் அழைத்து பயிற்சிகள் கொடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.
ஆனால், தனக்கு கம்பாலா விளையாட்டில் கிடைக்கும் வாய்ப்புகளும், கட்டடத் தொழிலாளியாக பணியாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருவாயும் போதும் என்றும் ஸ்ரீனிவாசா கூறியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: