திங்கள், 17 பிப்ரவரி, 2020

CAA க்கு எதிராக பேரவையில் விவாதிக்க மறுப்பு ... ஸ்டாலின் கோரிக்கை நிராகரிப்பு

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் விவாதிக்க முடியாது- தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிப்பு தினத்தந்தி : சிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் சிஏஏ-வுக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். தடியடி நடத்துவதற்கு யார் தூண்டி விட்டார்கள்? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடி சம்பவம் பற்றி மட்டும் சபையில் பேசலாம் என்றும், சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் பற்றி தற்போதைய கூட்டத் தொடரில் விவாதித்து நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். மேலும் பேரவை விதிகளை சுட்டிக் காட்டிய சபாநாயகர் தனபால், சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை: