தினத்தந்தி : சென்னை குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 13-ந் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதில், வருகிற 28-ந் தேதி வரை சென்னை நகரில் போலீசாரின் அனுமதி இன்றி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங் களை நடத்தக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், போலீசாரின் உத்தரவை மீறி சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ந் தேதி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில், போலீசார் மீது நடைபெற்ற கல்வீச்சு தாக்குதலில் சிலர் காயம் அடைந்தனர். இதனால், போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த தடியடி சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை வண்ணாரப்பேட்டையில் இன்று 4-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக